திருப்பூர் மாணவிக்கு கொரோனா: கோவை நர்சிங் மாணவியர் விடுதி மூடல்

திருப்பூர் மாவட்டம், மூலனூரை சேர்ந்த 19 வயது நர்சிங் மாணவி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நர்சிங் விடுதியில் தங்கி நர்சிங் பயின்று வந்து உள்ளார்.



இவர் கடந்த மே.25 ஆம் தேதி முதல் மூலனூரில் தங்கி இருந்து விட்டு, 5 ஆம் தேதி கோவை விடுதிக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. 


இதையடுத்து அந்த மாணவி தங்கியிருந்த விடுதியின் முதல்தளம் மூடப்பட்டது. மாணவியுடன் தங்கி இருந்த 40 நர்சிங் மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 


இதே போல திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் கோவை வந்த நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


நேற்று பிசியோதெரபிஸ்ட் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த வளாகம் மூடப்பட்ட நிலையில், இன்று திருப்பூர் மாணவிக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து வந்தவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


இவர்களுக்கு கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த தகவல் கோவை மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


 இந்நிலையில் மேற்படி மாணவி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், ஒரு நாள் மட்டுமே திருப்பூர் மாவட்டம் மூலனூர் சென்று வந்து இருப்பதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்