4,526 பேருக்கு கொரோனா...67 பேர் பலி...சென்னையில் குறையுது...மற்ற மாவட்டங்களில் உயருது...

தமிழ்நாட்டில் கொரோனா நோய்ப்பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. தினமும் 2000 பேருக்கு பாதிப்பு என்ற நிலையை தொட்ட சென்னையில் நோய்ப்பரவல் சற்று குறைந்து உள்ளது. 


அதற்கு பதிலாக சென்னை அல்லாத மாவட்டங்களில் கொரோனா தொற்றுப்பரவல் தீவிரம் அடைந்துள்ளது. 


தமிழ்நாட்டில் இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் மட்டும், 1078 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 


சென்னை அல்லாத மற்ற மாவட்டங்களில் மட்டும் 3,448 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுள்ளது.


சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 450 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.



 


இன்று 67 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 


4,743 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.


தற்போதைய நிலையில் தமிழகத்தில் மொத்தமாக 1,47,324 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டு உள்ளது. இதில் இன்று 4,743 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  97,310 பேர் குணமடைந்து உள்ளனர். 


இன்னும் 47,912 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


 


 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்