பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முழுவதுமாக கொள்முதல் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், சேடர்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் சங்க உறுப்பினர்கள் கொண்டு வரும்  பாலை முழுவதும் கொள்முதல் செய்யாமல்  திருப்பி அனுப்பும் நடவடிக்கையை கண்டித்தும், விவசாயிகள் கொண்டு வரும் பாலை முழுவதுமாக கொள்முதல் செய்ய கோரி   சேடர்பாளையம் பால் கூட்டுறவு  சங்கத்தின் முன்பாக சங்க துணைத் தலைவர் எஸ்.கே.பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே.கொளந்தசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். திரளான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்