கொரோனா கால நிவாரணம் கேட்டு சுற்றுலா வாகன கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அண்டை மாநில அரசுகள் வழங்குவதை போல் ரூபாய் 10000 கொரோனா கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்று சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு திங்கள் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வரும் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கொரோனா பேரிடர் காலத்தில் வாகனங்கள் இயக்கபடாததால்  காலாண்டு வரியை ஓராண்டுக்கு ரத்து செய்ய வேண்டும்,

 

வாகனங்கள் இயக்கப்படாத காலங்களில் காப்பீட்டு வரியை நீட்டித்து வழங்க வேண்டும்,

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை தகுதிச் சான்றிதழை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்,

வாகன கடன்கள் செலுத்த மேலும் 6 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும்,

அண்டை மாநில அரசுகள் சுற்றுலா ஓட்டுநர்களுக்கு  வழங்குவதைப் போல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கும் ரூபாய் 10000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உதகை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரீத்தி ரவி தலைமை தாங்கினார்.

 

செயலாளர்கள் கோவர்தன் ,சித்திக், நித்தின் சேகர், குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் வந்திருந்தனர். ஆனால் போலீசார் ஐந்து நபர்களை மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதித்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி