ஏலகிரி மலையில் பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாட்டம்


 

நாடு முழுவதும் கடந்த 17ஆம் தேதி பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளை பிஜேபி நிர்வாகிகள் கொண்டாடினர். தொடர்ந்து,

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலையில் அத்தனாவூர் பஸ் நிலையம் அருகில் பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு சோலையார்பேட்டை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட துணைத் தலைவர் சி.கவியரசு தலைமையில்  கொடியேற்றி பாரத் மாதா கி ஜே, இரும்பு மனிதர் நரேந்திர மோடி வாழ்க, போன்ற கோஷங்களை எழுப்பி. இனிப்பு வழங்கி அன்னதானம் பரிமாறி கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட பொறுப்பாளர் கோ வெங்கடேசன் மாவட்ட தலைவர் வாசுதேவன் மாவட்ட பொதுச் செயலாளர் கண்ணன் மாவட்ட பொது செயலாளர் தண்டபாணி ஒன்றிய தலைவர் முரளி ஒன்றிய பொதுச் செயலாளர் ரவி மாவட்ட செயலாளர் கலை சோமசுந்தர பாரதி, அசோகன் சரவணன், ஒன்றிய துணைத் தலைவர் மாரிமுத்து மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கலையரசு மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்