சட்டமன்ற உறுப்பினர் காரை சேதப்படுத்திய வழக்கு இருவர் கைது


 

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை தனிப்படையினர் 6 மணி நேரத்தில் இருவரை விரைந்து கைது செய்து விசாரணை மேற்கொணடு வருகின்றனர். 

     

மெய்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்டுபத்துப் பகுதியில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த காரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


 

இது குறித்து சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெய்குமார் நேரில் சென்று பார்வையிட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டு பிடித்து விரைவில் கைது செய்ய தனிப்படைகள் அமைத்தார்.

 

மேற்படி தனிப்படையினர் 6 மணி நேரத்தில் மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஜின்னா (27) என்பவரையும்,

 

தண்டபத்து கணேசன் மகன் செல்வநாதன் (41) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்