சென்னையில் இருந்து டெல்லி வழியாக மியான்மார் நாட்டை சேர்ந்த 13 பேர் சென்றனர்


 

இந்தியாவில் கொரோனா தொற்று ஊரடங்கிற்கு முன் தாய்லாந்து, மியான்மார், இந்தோனேசியா உள்பட நாடுகளில் இருந்து தப்லீக் ஜமாஅத்தினார் வந்திருந்தனர். தமிழக திருவாரூர் நீடாமங்கலம் பகுதியில் மியான்மார் நாட்டை சேர்ந்த 13 தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர். அவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு 6 மாதத்திற்கு பின் முடித்து வைக்கப்பட்டது. இதையடுத்து மியான்மார் நாட்டை சேர்ந்த 13 பேர் நீடாமங்கலத்தில் வேன்களில் சென்னை விமான நிலையம் வந்தனர். சென்னையில் இரவு டெல்லி சென்ற விமானத்தில் புறப்பட்டு சென்றனர். டெல்லியில் மியான்மார் நாட்டிற்கு செல்லும் விமானத்தில் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவர்களுடன் தமிழக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் டெல்லி சென்று இந்தியாவில் வேறு எங்கு தாங்காமல் மியான்மாருக்கு விமானத்தில் அனுப்பி வைத்துவிட்டு திரும்புவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்