Posts

Showing posts from November, 2024

குற்றவாளிகளை கண்டுபிடிக்க பத்து தனிப்படைகள் அமைப்பு..

திருப்பூர் பல்லடம் மூன்று பேர் கொலை வழக்கில் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த  சாயல்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட  தெய்வசிகாமணி தோட்டத்தில் தனது மனைவியுடன் வேலை பார்த்து வந்துள்ளார்.  அப்போது கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்து, வேலை சரியாகப் பார்ப்பதில்லை என தெய்வசிகாமணி அவர்களை வேலையை விட்டு நீக்கி உள்ளார். எனவே பாலமுருகனை போலீசார் அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் சாயல்குடி தம்பதிகளிடம் ரகசிய இடத்தில் நடந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை, இதனை அடுத்து நேற்று இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஐஜி செந்தில் குமார் டி.ஐ. ஜி.கள் சரவணன் சுந்தர் உமா மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.  பின்னர் இந்த கொலை வழக்கை விரைந்து  முடித்து குற்றவாளிகளை கைது செய்யும் நோக்கில்,  ஏ டி எஸ் பி பாலமுருகன் டிஎஸ்பிக்கள் ஆறுமுகம், மாயவன், சுரேஷ், சுரேஷ்குமார் கோகுல கிருஷ்ணன் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள் 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 10 தனிப்படையாக உயர்த்த...

திருப்பூர் ஆண்டிபாளையம் படகு இல்ல கண்காணிப்பு குழு அமைப்பு

Image
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மங்கலம் ரோட்டில் 58 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிபாளையம் குளம் அமைந்திருக்கிறது.  ஆண்டிபாளையம் குளத்தில்  ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை ஆண்டிப்பாளையத்தில் படகு இல்லம் உருவாக்கி சுற்றுலாத்தலமாக மேம்படுத்த 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த வாரம் முதலமைச்சர்  திறந்து  வைத்தார். ஆண்டிபாளையம் படகு இடத்தில் 13 படகுகளுடன் கூடிய படகு இல்லம், டிக்கெட் கொடுக்கும் இடம், உணவகம், காபி ஷாப்,  குழந்தைகள் விளையாட பூங்கா, குடிநீர் வசதி, கழிவபறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு தற்போது சுற்றுலாத்தலமாக மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்  உத்தரவின் பேரில் ஆண்டிபாளையம் படகு இல்லம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில்  திருப்பூர்    வருவாய் கோட்டாட்சியர் தலைவராகவும், மாவட்ட சுற்றுலா அலுவலர் உறுப்பி...

47 ஆண்டுகளுக்கு பிறகு கொங்கு மண்டலம் வழியாக வரும் புயல்... கோவை வெதர்மேன் விடுத்த எச்சரிக்கை!

Image
கோவையில் நேற்று, கோவை வெதர்மேன் என்றழைக்கப்படும் சந்தோஷ் கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:  புயல் சின்னம் பாண்டிச்சேரியை கடந்து கோவைக்கு வருவது போல் உள்ளது. 1977 ஆம் ஆண்டுக்கு பிறகு கொங்கு மண்டலம் வழியாக இந்த புயல் சின்னமானது பயணிக்கப் போகிறது. இதன் மூலம் கொங்கு பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம். ----------------------------  வீடியோ இதோ...  https://youtu.be/93THZiP9reA?si=4XEj2f14C_zAO4nn ----------------------------------  கோவை, திருப்பூ,ர் ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. 15 சென்டிமீட்டரில் இருந்து 25 சென்டிமீட்டர் வரை மழையை எதிர்பார்க்கலாம். பொதுவாகவே கொங்கு மண்டலத்தின் வழியாக புயல்கள் பயணிக்காது.இது மிகவும் அரிதான நிகழ்வு. நீலகிரி பகுதிகளில் அதீத கன மழை இருக்கும்.  30 முதல் 40 சென்டிமீட்டர் வரையிலான மழையை கூட எதிர்பார்க்கலாம் .  மேலும் நீலகிரியில் வெள்ளம் நிலச்சரிவு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.  டிசம்பர் 1ம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நீலகிரி செல்வ...

யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

Image
*யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை*   யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் இந்த ஆண்டாவது நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் யானைகள் மற்றும் யாணைப்பாகன்கள்  உள்ளனர்.      யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். யானை புத்துணர்வு முகாம் கடந்த 2003 முதல்  தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் உள்ள யானை களுக்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் இருந்து 48 நாட்கள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம் பட்டியில் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம்.  இந்த புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு தினமும் சிறப்பு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும். இதனால் இந்த 48 நாட்கள் யானைகள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் புத்துணர்வுடன் முகாமில் பங்கேற்கும். யானைகள் முகாம் 6 ஏக்கரில் அமைக்கப்பட்டு முகாமில் பாகன்கள் தங்கும் இடம், ஓய்வு அறை, தீவன மேடை, சமையல் கூடம், யானைகளைக் குளிக்க வைப்பதற்காக ஷவா்பாத், பாகன்கள் மற்றும் யானைகளுக்கு மருத்து...

வானகிரி நூலகத்திற்கு 10 ஆயிரம் மதிப்புள்ள புக் ஷெல்ப் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் முயற்சியில் வழங்கப்பட்டது

Image
*வானகிரி நூலகத்திற்கு 10 ஆயிரம் மதிப்புள்ள புக் ஷெல்ப் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் முயற்சியில் வழங்கப்பட்டது!*   மயிலாடுதுறை அடுத்த பூம்புகார் வானகிரி மீனவர் கிராமத்தில் உள்ள ஊர் புற நூலகத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைப்பதற்கான புக் ஷெல்ப் எனப்படுகின்ற புத்தக அலமாரி இல்லாமல் தற்போது பெய்து வரும் மழையால் சுவரில் நீர்கோர்த்து புத்தகங்கள் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்த மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் சமூக வலைத்தளத்தின் வாயிலாக தனது நண்பர்களுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து கென்யாவில் பணியாற்றி வரும் மல்லியம் வெங்கடேஷ் மற்றும் நண்பர்களின் நிதி உதவியுடன் ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள 3 புக் ஷெல்ப்புகளை வானகிரி நூலகத்திற்கு வாங்கிக் கொடுத்தார். அதனை நூலகர் சுதா நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, ஏற்பாடு செய்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மற்றும் நிதி அளித்து உதவிய வெங்கடேஷ் உள்ளிட்டவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். எதற்கெடுத்தாலும் அரசை மட்டுமே நாம் நம்பி இல்லாமல் பொதுமக்களின் நல்லாதரவோடு அரசு அலுவலர்கள் தத்தம் அலுவலகத்திற்கு தேவையான இது போன்ற உதவ...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், சொத்து வரி, ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து, கடை அடைப்பு

Image
 மாநில அரசு பொதுமக்களின் சொத்துக்கள் மீது,வருடா வருடம், 6 சதவீத வரியும், அதை செலுத்துவதில் காலதாமதம் செய்தால் கூடுதலாக 1% அபராத வரியும் நிர்ணயம் செய்து உள்ளது. அதேபோல மத்திய அரசும், வியாபாரம் செய்கின்ற வணிக நிறுவனங்களுக்கு 18% ஜி.எஸ்.டி வரியை நிர்ணயம் செய்துள்ளது.  அனைத்துப் பொதுமக்கள் மீதும், வியாபாரம் செய்கின்ற வணிகர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வரி சுமைகளை நீக்கக் கோரியும், அநியாய வரிகளுக்கு எதிராக, 29-ம் தேதி இன்று வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என,அனைத்து வணிகர் சங்கம் ,நகை வியாபாரிகள் சங்கம், ஜவுளிக்கடை உரிமையாளர்கள் சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்,விநியோகஸ்தர்கள் சங்கம், மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம், தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம், நகராட்சி கடை வியாபாரிகள் சங்கம், மருந்து கடை உரிமையாளர் கள் சங்கம், வீடியோ & போட்டோ கிராபர்ஸ் அசோசியேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தது. அனைத்து அமைப்புகளின் அழைப்பின் பேரில், இன்று அதிகாலை முதலே பரபரப்பாக காணப்படும் சத்தியமங்கலம் தினசரி மார்க்கெ...

நீலகிரி எம்.பி. ஆ.ராசா நேரில் பேச்சுவார்த்தை. சத்தியமங்கலம் வழக்கறிஞர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் வாபஸ்.

Image
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், பழைய பேருந்து நிலையம் அருகே, ஒருங்கிணைந்த நீதிமன்றம் இயங்கி வருகிறது.இந்த நிலையில், சத்தியமங்கலம் நீதிமன்றம் நீண்ட காலமாக, வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதை மாற்றி, சொந்த கட்டிடத்தில் செயல்பட, சத்தியமங்கலம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அரசு சத்தியமங்கலம் உழவர் சந்தை அருகே, நீதிமன்றம் அமைக்க, 3 ஏக்கர் நிலம் ஒதுக்க ஏற்பாடு செய்தது. தற்போது, திடீரென சத்திய மங்கலம் அத்தாணி ரோட்டில், கொமாரபாளையம் அரசு மருத்துவமனை அருகே, நீதிமன்ற வளாகம் கட்ட, நிலம் ஒதுக்கீடு செய்து, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த, வழக்கறிஞர்கள், சத்தியமங்கலம் உழவர் சந்தை அருகே, நீதிமன்றம் அமைக்கக் கோரி, நேற்று முதல் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சி.ஆர்.ரமேஷ் தலைமை தாங்கினார் 2 வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம், ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான, ஆ.ராசா இன்று வழக்கற...

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா : மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடப்பட்டது

Image
 துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா : மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடப்பட்டது தமிழகத்தின் துணை முதல்வர், திமுக இளைஞர் அணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி P.கீதா ஜீவன் அவர்களின் உத்தரவின்படியும், மாநகரச் செயலாளர் திரு S.R ஆனந்த சேகரன் அவர்களின் ஆலோசனை படியும்  51 வது வார்டு , வீரநாயக்கன் தட்டு மகளிர் அணி திருமதி M.முத்துலெட்சுமி  அவர்களின் தலைமையில் அப்பகுதில் உள்ள வீர நாயக்கன் தட்டு மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது..  இந்நிகழ்வில் 51 வது வார்டு கழக வட்ட செயலாளர் திரு செல்வராஜ், வட்டப் பிரதிநிதி திரு கணேசன், பகுதி மாணவர் அணி விக்னேஷ், மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், வழக்கறிஞர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்.

Image
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்  ஒருங்கிணைந்த நீதிமன்றம், நீண்ட காலமாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு சொந்தமான கட்டிடம் வேண்டும் என வழக்கறிஞர்கள் அரசுக்கு, கோரிக்கை விடுத்ததையடுத்து. தமிழக அரசு சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, உழவர் சந்தை அருகே, க.ச.எண் 78/1-ல்,5ல், 3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு சுமார் 46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டுவதற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் கோட்டாட்சியர், சத்தியமங்கலம் வருவாய் துறை அதிகாரிகள் அனுமதி பெற்றுள்ள நிலையில், தற்போது கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த இடத்தில் நீதிமன்றம் வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து,  சத்தியமங்கலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், நீதிமன்றத்திற்கு வரும் வழக்காடிகள் நலனுக்காகவும், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் நீதிபதிகள் நலனுக்காக, எளிதில் நீதிமன்றத்திற்கு வந்து...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், தமிழக முதல்வரை கண்டித்து, பாமகவினர் ஆர்ப்பாட்டம். காவல் துறையினர் கைது நடவடிக்கை..

Image
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தலைவர், மருத்துவர் ராமதாஸை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதை கண்டித்து, தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலத்தில், பேருந்து நிலையம் முன்பு, பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, பாட்டாளி மக்கள் கட்சி ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கே.ராஜா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ராதாஸ் பாலு,சத்தி நகர்மன்ற 14-வது வார்டு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜான் சார்லஸ், மாவட்ட மகளீரணி செயலாளர் பார்வதி, வரதராஜ் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.  போலீசார் அனுமதியின்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரை, சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் விருந்து கொடுத்து பாராட்டு

Image
*துப்புரவு தொழிலாளர்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் விருந்து கொடுத்து பாராட்டு!*      மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் காரைக்கால் லட்சுமிகாந்தன் வயது 81 அவர்கள் கூறைநாடு பகுதியில் நகராட்சியில் துப்புரவு பணி மேற்கொண்டு வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து மதிய விருந்து அளித்து பாராட்டு செய்தார். மிகப்பெரிய அளப்பரிய பணியை தினமும் மேற்கொண்டு வரும் துப்புரவு பணியாளர்களின் சேவை பெரிதும் போற்றப்பட வேண்டும், அவர்கள் ஒரு நாள் இல்லையேல் சுகாதாரம் முற்றிலும் முடங்கி பல்வேறு பிரச்சனைகள் நோய்கள் உருவாகும் என்பது உறுதி. அப்படிப்பட்ட புனிதமான பணியை செய்து வருகின்ற அனைத்து துப்புரவு பணியாளர்களும் போற்றப்பட வேண்டியவர்கள். குறிப்பாக அவரவர் பகுதியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை அவ்வப்பொழுது ஊக்குவித்து பாராட்டி மகிழ்வித்தால் அனைவருக்கும் சிறப்புடையதாக அமையும். மக்களின் நலனுக்காக தங்களது உடலை வருத்தி நேரம் காலம் பார்க்காமல், மெழுகுவத்தி போல பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாராட்டுவோம். அவர்களின் குடும்பத்தினருக்கும்...

திருப்பூர் மாவட்ட கபாடிக்கழகம் சார்பில் தேசிய போட்டியில் சாதித்த தமிழக பெண்கள் கபாடி அணிக்கு ரூ.75 ஆயிரம் ஊக்கத்தொகை

Image
 17 வயதுக்கு உட்பட்ட  பள்ளி மாணவிகளுக்கான தேசிய அளவிலான  கபாடிப் போட்டி மத்திய பிரேதசம் மாநிலத்தில்  நடைபெற்றது. இதில் தமிழக அணி இறுதிப் போட்டி வரை சென்ற தமிழ்நாடு பெண்கள் அணி  இரண்டாம் இடம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற தமிழக பள்ளி மாணவிகள் அணிக்கு பாராட்டு விழா திருப்பூர் மாவட்ட கபாடிக் கழகத்தில் நடைபெற்றது.  விழாவிற்கு மாவட்ட கபாடிக் கழக சேர்மன் கொங்கு வி.கே. முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட கபாடிக் கழக செயலாளரும், மாநில கபாடிக் கழக பொருளாளருமான ஜெயசித்ரா  ஏ. சண்முகம்  முன்னிலை வகித்தார்.  பொருளாளர் கன்னிமார்ஸ் ஏ. ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், பயிற்சியாளர், தலைமை மேலாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு நினைவுப் பரிசும், ஊக்கத் தொகையாக 15 நபர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.75,000 வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட கபாடிக் கழக துணைச் சேர்மன் எஸ். முருகானந்தம், துணைத் தலைவர் கொ. ராமதாஸ், செய்தித் தொடர்பாளர் சு. சிவபாலன், பள்ளி விளையாட்டு ஆய்வாளர்  மகேந்திரன், புரவலர்கள்  மகாலட்சுமி ரத்...

பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா

Image
பொள்ளாச்சி கோவை தெற்கு மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாவட்ட அலுவலகம் பொள்ளாச்சி பூ மார்க்கெட்டில் 24/11/2024 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது நிகழ்ச்சியில் தலைமை மாவட்ட செயலாளர் முருகன், வரவேற்புரை மோகன் பூசாரி பொள்ளாச்சி மாவட்ட பொருப்பாளர், ஆசியுரை ஸ்ரீ ராஜ தேவேந்திர ஸ்வாமிகள் இந்திரேஸ்வரா மடாலயம் கோவை, சிறப்புரை மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார், வாழ்த்துரை ரங்கசாமி கோவை மண்டல இணை அமைப்பாளர் பூசாரிகள் பேரவை, கோவிந்தராஜ் கோட்ட அமைப்பாளர் பூசாரிகள் பேரவை, முத்துகுமார் பிஜேபி ஒன்றியதலைவர், சிவக்குமார் விவேகானந்தர் பேரவை, நன்றியுரை சரவணக்குமார் பூசாரி பொள்ளாச்சி நகர தலைவர் நிகழ்ச்சியில் மாநில இணை பொதுச் செயலாளர் விஜயகுமார் பேசியதாவது நமது விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாகவும் 1990 ஆம் ஆண்டு முதல் அனைத்து ஜாதியை சேர்ந்தகிராம கோவில் பூசாரிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் பூணூல் அணிவிக்கப்பட்டது. அது தற்...

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு சிந்தனை சிற்பி சிங்காரவேலன் சிலைக்கு புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு சிந்தனை சிற்பி சிங்காரவேலன் சிலைக்கு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கழகத்தின் தலைவர் மு.இராமதாஸ் அவர்கள் தலைமையில் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி (21/11/2024) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கடலூர் சாலை நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலன் சிலைக்கு கழகத்தின் தலைவர் மு.இராமதாஸ் தலைமையில் சேர்மன் R L வெங்கட்டராமன் முன்னிலையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  மாநில நிர்வாகிகள் துணை தலைவர் மாநில செயலாளர்கள் சிவகுமாரன், மோகனசுந்தரம், ரவிகுமார், துணை செயலாளர் கலியபெருமாள் , தலைவர்கள் சந்திரன், விமலா பெரியாண்டி முன்னாள் வார்டு உறுப்பினர் தஞ்செயன் , கோமதி, ராஜேஷ், அருண், பீட்டர் மற்றும் ஏராளமான கழக தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்