உலக மீனவர் தினத்தை முன்னிட்டு சிந்தனை சிற்பி சிங்காரவேலன் சிலைக்கு புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு சிந்தனை சிற்பி சிங்காரவேலன் சிலைக்கு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கழகத்தின் தலைவர் மு.இராமதாஸ் அவர்கள் தலைமையில் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி (21/11/2024) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கடலூர் சாலை நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலன் சிலைக்கு கழகத்தின் தலைவர் மு.இராமதாஸ் தலைமையில் சேர்மன் R L வெங்கட்டராமன் முன்னிலையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 மாநில நிர்வாகிகள் துணை தலைவர் மாநில செயலாளர்கள் சிவகுமாரன், மோகனசுந்தரம், ரவிகுமார், துணை செயலாளர் கலியபெருமாள் , தலைவர்கள் சந்திரன், விமலா பெரியாண்டி முன்னாள் வார்டு உறுப்பினர் தஞ்செயன் , கோமதி, ராஜேஷ், அருண், பீட்டர் மற்றும் ஏராளமான கழக தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி