Posts

நெஞ்சம் பதற வைத்த வெடிவிபத்து - பட்டாசு ஆலை தரைமட்டம்: 2 பேர் பலி, 6 பேர் படுகாயம்

Image
  வீடியோ இதோ   விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள சின்னகாமன்பட்டி கிராமத்தில் சூரிய பிரபா என்ற பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20 பேர் பட்டாசு  தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் சூரிய பிரபா பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த வெடிமருந்து, தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் என அனைத்தும் வெடித்து சிதறின. கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகள் வெடித்ததால் பட்டாசுத் தொழிலாளர்கள் வெளியேறுவதற்குள் தாறுமாறாக பட்டாசுகள் வெடித்தன. இதில் வெடிமருந்து கிடங்கு, பட்டாசுகள் இருப்பு வைக்கும் கிடங்கு உட்பட மூன்று கிடங்குகள் இடிந்தன. பட்டாசு வெடித்தது பெரிய விபத்து போல மூணு கிலோமீட்டர் சுற்றளவிற்கு பலத்த வெடிச்சத்தம் கேட்டது. தீயணைப்பு துறை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து வெடி விபத்தால் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அவர்களுக்கு பொதுமக்களும் உதவி செய்தனர். வெடி விபத்தில் சிக்கிய 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக பலியாகினர். பட்டாசு வ...

தனுஷ் படம் எடுக்க தடை கேக்கறாங்க..

Image
தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் மாநில அமைப்பு செயலாளரும் நெல்லை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான பவானி வேல்முருகன் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை துணை தலைவர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும். குறிப்பாக நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்க வேண்டும்.  தென் மாவட்டங்களில் அமைதி சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இதுபோன்ற படப்பிடிப்புகளால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.  கர்ணன் திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை நடிகர் தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.  இது காவல்துறை கண்ணியத்தை கெடுப்பதாக அமைகிறது.  குறிப்பாக அந்த திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.  தொடர்ந்து இது போன்ற திரைப்படங்கள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டி வருகிற இயக்குனர் மாரி செல்வராஜ...

மாமியாரை கொன்று விட்டு ஹாலில் ஹாயாக உட்கார்ந்திருந்த மருமகள்

Image
ஆதம்பாக்கத்தில் குடும்ப தகராறில் மாமியார் கொலை மருமகளிடம் போலீஸ் விசாரணை சென்னையை கிண்டி அடுத்துள்ள ஆதம்பாக்கம் கணேஷ்நகரை சேர்ந்தவர் சரவணன்(52). இவர் பெரம்பூர் கருவூலத்தில் உதவியாளராக பணியாற்றி வருகின்றனர். இவரது மனைவி சரஸ்வதி(48). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.  சரவணன் தன்னுடன் தாய் சுலோசனா(77) மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சரவணனின் மனைவி கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது சம்பவத்தினவீaட்டில் சரஸ்வதி தனது மாமியாருடன் இருந்தார்.  வீட்டிற்கு சரவணன் தனது மகனுடன் வீட்டிற்கு  வந்தபோது  கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. வை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஹாலில் சரஸ்வதி அமர்ந்து இருந்தார். உள் அறையில் சுலோச்சனாவின் இடது கண் புருவம், நெற்றி ஆகிய பகுதிகளில் காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுலோச்சனா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சுலோச்சனா உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர். இது பற்றி ...

நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

மானூர் அருகே நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு நெல்லை பிப் 20 மானூர் அருகே தென்கலத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 3 சென்ட் நிலத்தை அறநிலையத்துறை நவடிக்கை மூலம் மீட்கப்பட்டது. சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் ஏராளமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. இதில் மானூர் வட்டம், தென்கலம் கிராமத்தில் சுமார்  600 ஏக்கருக்கும் அதிகமான  நிலங்கள் உள்ளன.  இதில் 30 சென்ட் அமைந்துள்ள நிலத்தில் தாழையூத்து புளியங்கொட்டாரம் கிராமத்தை சேர்ந்த முருகாண்டி மகன் பாலையா என்பவர் 3 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார். மேலும் கடந்த 8ம் தேதி நிலத்தை சுற்றிலும் வேலி அமைத்துள்ளார்.இதுகுறித்து கோயில் செயல்அலுவலர் ராமராஜா தாழையூத்து டிஎஸ்பி அலுவலகத்திலும், மானூர் போலீசிலும் புகார் செய்தார்.  புகாரையடுத்து தாழையூத்து டிஎஸ்பி பொன்னரசு, மானூர் தாசில்தார் மோகன், துணை தாசில்தார் மாரியப்பன், குறுவட்ட வருவாய் ஆய்வாளர் உமா, தென்கலம் கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் நெ...

நெல்லை அருகே சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

  நெல்லை பிப் 20 களக்காடு காவல் நிலையத்தில் உள்ள வழக்கில் சிங்கிகுளம் பகுதியை சேர்ந்தவர்களான சுரேஷ்(22) , மற்றுமாெரு சுரேஷ் (18), பவித்ரன் (19), மணிகண்டன் (22) ,சுரேஷ் (20) ஆகியோர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா  கவனத்திற்கு வந்தது. இதையடுத்து 5 பேரையும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க களக்காடு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா அறிவுறுத்தியதன் பேரில், அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவின் பேரில், சுரேஷ், மற்றொரு சுரேஷ், பவித்ரன், மணிகண்டன், முத்துசுரேஷ், ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில்  அடைக்கப்பட்டனர்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு :  நெல்லையில் முற்றுகை பாேராட்டம்

Image
கு டியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு :  நெல்லையில் முற்றுகை பாேராட்டம்   நெல்லை பிப் 20 குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.  மத்திய அரசின் குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.  இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், கடையநல்லூர், ஏர்வாடி, பொட்டல்புதூர் உள்பட பல இடங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன. இந்த நிலையில், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று  புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக திருநெல்வேலி வண்ணார்பேட்டை முதல் கொக்கிரகுளம் வரையிலான அண்ணா சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.  மேலப் பாளையத்தில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 5 ஆய...

டிரைவரை கொல்ல நடந்த களேபரம்: அரிவாளால் வெட்டி, நாட்டு வெடிகுண்டு வீசி அழிச்சாட்டியம்

Image
முன் விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி நாட்டு வெடிகுண்டு வீடி ஓட்டுநரை கொல்ல முயற்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.  சென்னை பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம் பிரதான சாலை, நேரு நகர் சந்திப்பில் நேற்றிரவு ஓட்டுநர் முத்து செல்வம்(35) என்பவரை ராஜேஷ் மற்றும் அவருடன் வந்த மூன்று பேர் முத்து செல்வத்தை வழிமறித்து சரமாறியாக வெட்டிவிட்டு முருகாவை எதிர்த்து நீ ஊர்ல வாழ முடியுமா எனக் கூறி தலையிலேயே பெட்டியுள்ளனர். பின்னர் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில் முத்து செல்வத்திற்கு இடதுபக்க காது, கழுத்து, கை, கைவிரல்கள், வலது கால், இடது கால் என பல்வேறு இடங்களில் காயமேற்பட்டுள்ளது. தற்போது பள்ளிகரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  பள்ளிகரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில் அதிமுகவை சேர்ந்தவர் முருகம் என்பதும் பாதிக்கப்பட்டவர் திமுகவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. உள்ளாட்சி தேர்தல் வர உள்ள சூழ்நிலையில் அதன் காரணமாக இச்சம்பவ...