Posts

பள்ளியில் RSS ஷாகா வகுப்பு.! : பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.! - விசிக, மே 17, திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கைது.!

Image
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள "தர்ம சாஸ்திரா" பள்ளியில் RSS ஷாகா நடைபெறுவதறிந்து கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்பள்ளியை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மே17 இயக்கம் , திராவிட தமிழர் கழக இயக்க நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இராமநாதபுரம் : மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி! - அமைச்சர் ராஜகண்ணப்பன் விற்பனையை துவக்கி வைத்தார்.!

Image
இராமநாதபுரம் நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில் இன்று இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை சார்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் , மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை துவக்கி வைத்தார்.   இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித தலைவர் சங்கர் லால் குமாவத், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்) செ.முருகேசன் (பரமக்குடி) கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கே.ஜே.பிரவீன்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் உ.திசைவீரன் , கைத்தறித் துறை உதவி இயக்குநர் செ.சந்திரசேகரன் உட்பட அரசு அலுவலர்கள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் - மனைவி லாரி மோதி பலியான பரிதாபம்.!

Image
கோபிசெட்டிபாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற  கணவன், மனைவி இருவரும் லாரி மோதிய விபத்தில்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள  பங்களாபுதூர் எருமைகுட்டை அண்ணாநகரை சேர்ந்தவர்கள்  பெருமாள், கீதா தம்பதி. இவர்கள்  இருவரும் விவசாய கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு   8  வயதில் ரிதன்யா என்ற மகளும்,  5 வயதில் மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர்.  இந்நிலையில், வழக்கம்போல்  வேலை முடிந்ததும்  தம்பதி இருவரும்  வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது, வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் கேபிள் வயர் அறுந்து விட்டதால், டிவி பார்க்க முடியவில்லை என  பிள்ளைகள் கூறி உள்ளனர்.  அதைத்தொடர்ந்து பெருமாள் புதிய கேபிள் வயர் வாங்குவதற்காக  பைக்கில் கிளம்பிபோது,  கீதாவும் கடைக்கு வருவதாக கூறவே, இருவரும் பைக்கில் டி.என்.பாளையத்திற்கு சென்று உள்ளனர். அப்போது கோவையில்  இருந்து அந்தியூர் நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக பெருமாள், கீதா தம்பதி சென்ற பைக் மீது நேருக்கு நேர் மோதி...

மஹாத்மா காந்தி குறித்து தரக்குறைவான விமர்சனம்!! - இந்து சாமியார் காளிசரண் மஹாராஜ் மத்தியபிரதேசத்தில் கைது.!*

Image
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடந்த தர்ம சன்ஸாத் என்னும் மாநாட்டில் தேசப்பிதா மஹாத்மா காந்தியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்திய காளிசரண் மஹாராஜ் என்பவர் மத்தியபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26-ஆம் தேதி நடந்த நிகழ்சியில் பேசிய காளிசரண் மஹாராஜ், காந்தியை சுட்டுக் கொன்றதற்காக கோட்சேவுக்கு வணக்கம் தெரிவிப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பிரமோத் தூபே அளித்த புகாரின் பேரில், இரு பிரிவினருக்கு இடையே பகையை தூண்டும் வகையில் பேசியதாக காளிசரண் மஹாராஜ் மீது ராய்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோவில் இருந்த காளிசரண் மஹாராஜை சத்தீஸ்கர் போலீசார் கைது செய்தனர்.

மும்பையில் கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது.!டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் எச்சரிக்கை - ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை விதித்து மாநில அரசு உத்தரவு.!!

Image
மும்பையில் கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டதையடுத்து ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றும் உருமாறிய ஓமிக்ரான் தொற்றும் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு 150 கொரோனா தொற்று  மட்டுமே பதிவாகி இருந்த சூழலில், மும்பையில் நேற்று ஒரே நாளில் 2,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மும்பையின் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிட 82% அதிகமாகும். அதே போல் ஓமிக்ரான் தொற்று பாதிப்பும் அதிகரித்துள்ளது.  இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த மும்பையில் இன்று முதல் ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து மகாராஷ்டிர அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.மேலும் ஜனவரி 7ம் தேதி வரை உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் ஊரடங்கு மற்றும் வெளிப்புற புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மும்பையில் இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா 3வது அலை மும்பையில் தொடங்கிவிட்டதாக கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்க...

புத்தாண்டு கொண்டாட்டம் : "பூங்கா, கடற்கரை பகுதிகளில் அனுமதி இல்லை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை" - எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 2022 புத்தாண்டு தினத்தை பூங்கா, கடற்கரை பகுதிகளில் கொண்டாட அனுமதி இல்லை எனவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். தற்போது பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆகவே நாளை (31.12.2021) இரவு மற்றும் 2022ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் தினமான சனிக்கிழமை அன்றும் தூத்துக்குடியில் உள்ள பீச் ரோடு, அங்குள்ள பூங்காக்கள், புதிய துறைமுகம், தெர்மல்நகர் பீச் மற்றும் கடற்கரை பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.  பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே புத்தாண்டை கொண்டாட வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்” செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்...

தூத்துக்குடி விமான நிலைய தீயணைப்பு துறைக்கு 2 அவசரகால மீட்பு ரப்பர் படகு.!

Image
தூத்துக்குடி விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு துறைக்கு,  2 அதிநவீன இன்ஜின் பொருத்தப்பட்ட அவசரகால மீட்பு ரப்பர் படகு வாங்கப்பட்டது.  இதை விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு  துறைக்கு  விமான நிலைய இயக்குனர் N. சுப்ரமணியன் ஒப்படைத்தார். பின்னர் புதிய மீட்பு படகுக்கான பரிசோதனை ஓட்டம் முடிவைத்தானேந்தல் கிராமம் அருகே உள்ள குளத்தில் நடைபெற்றது.  இந்த பரிசோதனை ஓட்டத்தை விமான நிலைய இயக்குனர் N. சுப்பிரமணியன்  துவக்கி வைத்து, சோதனை ஓட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது... "இந்த இரண்டு ரப்பர் படகுகளின் விலை 9.78 லட்சம். ஒரே சமயத்தில் 12 பேரை காப்பாற்றலாம், இந்த படகுகளின் உள்ளே முதல் உதவிக்கான உபகரணங்கள் மற்றும் லைப் ஜாக்கெட் ‌, மிதக்கும் உபகரணம் ஆகியவை  அடங்கியதாகும்" என கூறினார் இவ்விழாவில் விமான நிலைய கட்டுமான பிரிவு இணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன். தீயணைப்பு துறை மேலாளர்கள்.B. கணேஷ் மற்றும் J S J. செல்வராஜ் விமான நிலைய பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விமலா மற்றும் விமான நிலைய மேலாளர் .S. ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.