Posts

ராமநாதசுவாமி திருக்கோயிலில் தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என காவல் நிலையத்தில் புகார்

Image
ராமேஸ்வரம் ஜன. 29 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த தற்காலிக ஊழியர்கள் 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தனியார் செக்யூரிட்டி சர்வீசில் பணிபுரிந்த நபர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் மற்றும் பிஎஃப் வழங்கப்படவில்லை என ராமேஸ்வரம் திருக்கோயில் காவல் நிலையத்தில் இன்று தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நிர்வாகம் கோவில் நிர்வாகம் மீது புகார் அளித்துள்ளனர் புகாரைப் பெற்ற காவல்துறை துணை ஆய்வாளர்  விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி செய்யும் அதிகாரிகளுக்கான தேர்தல் பயிற்சி

Image
நெல்லை மாநகராட்சி தேர்தலில், மண்டல தேர்தல் அலுவலர்களாக  பணி செய்யும் அதிகாரிகளுக்கான தேர்தல் பயிற்சி நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 55  வார்டுகளில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 389 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள கொரனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணி செய்து முடிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி நெல்லை மாநகராட்சியில் 160 பகுதிகளில் மொத்தம் 490 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 15 முதல் 20 வாக்குச்சாவடி களாக பிரிக்கப்பட்டு மண்டல அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.  வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று மண்டல அளவில் நியமிக்கப்பட உள்ள தேர்தல் அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் வாக்குச்சாவடிகள் அமைவிடம் வாக்குச்சாவடி பெயர் போன்றவை குறித்த தகவல்களை வாக்காளர்கள் தெரியும் வகையில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்த பயிற்சி  நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையா...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சம்பந்தமாக அனைத்துக் கட்சிக் கூட்டம்

Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகள் சம்பந்தமாக அனைத்து கட்சி கூட்டம் கோபி கேஎம்எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள கொரோனா தொற்று சம்பந்தமான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசியல் கட்சிகளுக்கு நகராட்சி துப்புரவு ஆய்வாளர். செந்தில்குமார் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர்  வசந்தகுமார் ஆகியோர் தலைமையில் விளக்கி எடுத்துரைக்கப்பட்டது.இதில் அனைத்து கட்சியினரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.

விதிமுறை குறும்பட வெளியீடு

Image
ஜனவரி 29 கோவை மாவட்டத்தில் பெருகிவரும் கொரோனா பரவலைத் தடுப்பதுபற்றியும், அதிலிருந்து நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பது பற்றியும், திரைப்பட இயக்குனர் சூலூர் சுரேஷ்குமார் எழுதி இயக்கிய விதிமுறை என்ற சமூக விழிப்புணர்வு குறும்படத்தை  கோவை கமிஷனர் அலுவலகத்தில் துணை ஆணையர் உமா ஐபிஎஸ் மற்றும் துணை ஆணையர் தலைமை இடம் செல்வராஜ் ஐபிஎஸ்இணைந்து வெளியிட்டு இயக்குனரை மேலும் இதுபோன்ற நல்ல படங்களை சமூகத்திற்கு வழங்குமாறு வாழ்த்தினர்  இந்தக் குறும்படத்தை ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மற்றும் சாட்டிலைட் ஸ்ரீ விநாயகா கிரியேஷன்ஸ்  தயாரித்தனர்  இந்த நிகழ்ச்சியில் நிகழ்வில் திரைப்பட இயக்குனர் சுரேஷ்குமார்,ரோட்டரி கிளப் பிரசிடெண்ட் டாக்டர்சிவப்பிரகாஷ், செகரட்டரி யுவராஜ் சிங்காரவேலு உடனிருந்தனர்  இப்படத்தைப் பற்றி இயக்குனரிம் நம் நாளிதழ் சார்பில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது இதற்கு முன் இதைப்போன்ற சமூக விழிப்புணர்வு படங்களை நீங்கள் வெளியுட்டதுண்டா  முப்பத்தைந்து படங்களுக்கு மேல் வெளியிட்டதோடு பல மாவட்ட மாநில விருதுகளையும் வாங்கியிருக்கிறேன் குறும்படம் தாண்டி வெள்...

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி.!

Image
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில்  தீண்டாமையை  ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமையில் இன்று  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் மற்றும் குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்." என்ற தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ வாசிக்க மாநகராட்சி பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். #Charusree_t #TutyCorp

5 ஆண்டுகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தமால் இருந்த அதிமுக - 5 நாள் கூட அவகாசம் தராத திமுக - பாட்டாளி மக்கள் கட்சி மாநில நிர்வாகி குற்றச்சாட்டு.!*

Image
தமிழகத்தில் அடுத்த மாதம் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுதாக்கலும் நேற்று தொடங்கியுள்ளது. இதையெடுத்து அனைத்து கட்சியினரும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, பிரச்சரம் குறித்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பட்டாளி மக்கள் கட்சி அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில்  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அதன் மாவட்ட செயலாளர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் கருப்பசாமி வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில இணை செயலாளர் இசக்கிபடையாச்சி கலந்து கொண்டு தேர்தல் பணிகள், வேட்பாளர்கள் தேர்வு, பிரச்சாரம் குறித்து எடுத்துரைத்தார்.  அப்போது அவர் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அதிமுக நடத்தவில்லை தற்பொழுது அறிவிக்கப்பட்டு இருந்தாலும் 5 நாள்கூட அவகாசம் கூட கொடுக்கமால் அறிவித்துள்ளனர். இதனை பட்டாளி மக்கள் கட்சி ...

பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது : பள்ளிக்கல்வித்துறை

Image
ள் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆனால் கொரோனா குறித்து அச்சம் இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது. பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படும்.  எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம். நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.