Posts

கோவில்பட்டி அருகே சிறிய ஓடையில் கவிழ்ந்த அரசு பஸ் - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்.!

Image
கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கு இளையரசனேந்தல் கொளக்குட்டான்குறிச்சி வழியாக அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் வழக்கம் போல அந்த அரசு பஸ் கழுகுமலைக்கு சென்று பயணிகளை இறக்கிவிட்டு,  பின்னர் கோவில்பட்டிக்கு கிளம்பியுள்ளது. பஸ்சில் மிக குறைவான பயணிகள் தான் இருந்துள்ளனர். இந்த நிலையில் கோவில்பட்டி அருகே வெங்கடசலாபுரம் அருகே பஸ் வந்த போது, மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.  மூதாட்டி மீது மோதமால் இருக்கும் வகையில் டிரைவர் பஸ்சினை திருப்ப முயன்றுள்ளார். ஆனால் பஸ் நிலை தடுமாறி அருகில் இருந்த சிறிய ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை..

மாட்டுக்கறி சாப்பிடுவதாக கூறி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை! - பீகாரில் பரபரப்பு.!

Image
பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகாரின் சமஸ்திபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது கலீம் ஆலம் (36). ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் உறுப்பினரான இவர், இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்த சூழலில், அவரது உடல் அங்குள்ள ஏரிக்கரையோரத்தில் எரிந்த நிலையில் கடந்த 19-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது.இதுகுறித்து போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், முகமது கலீமை சிலர் தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில், முகமது கலீம் மண்டியிட்ட நிலையில் கைகளை கட்டியபடி இருக்கிறார். அப்போது அவரை சுற்றியிருந்த மர்மநபர்கள், "ஏன் நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறீர்கள்?", "இதுவரை உன் வாழ்நாளில் எத்தனை கிலோ மாட்டுக் கறியை உண்டிருப்பாய்?" என்பன போன்ற கேள்விகளை கேட்டு, அவரை சரமாரியாக தாக்குகின்றனர். சுமார் இரண்டரை நிமிடம் ஓடு...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி.!

Image
திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக கடந்த 21ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  திமுக பிரமுகரை அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கியதாக கடந்த 21ஆம் தேதி இரவு ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

TNPSC Group குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- அறிவிப்பாணை வெளியீடு

Image
குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் இன்று (பிப்.23) முதல் மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.  2022ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெறும். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்பட உள்ளது. முதன்மைத் தேர்வுகள் தமிழ்நாட்டில் 32 மையங்களில், காலை 9 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 32 நகரங்களில் 117 மையங்களில் டின்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும். மாலையில் நடைபெறும் தேர்வில் எந்த நேர மாற்றமும் இல்லை. தேர்வில் ஜெல் பேனா, பால் பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தலாம். இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளன. அதற்குப் பிறகு முதன்மைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். துறை ரீதியான பணி நியமனம் குறித்து மார்ச் 3ஆம் தேதி விரிவான அறிவிப்பு வெளியிடப்படும்.  தேர்வு முறைகேடுகளைத் தடுக்க த...

தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Image
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் ஆவணங்கள் இன்றி 50ஆயிரத்திற்கும் மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது, அரசியல் கட்சிகள் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தபட்டிருந்தன. மேலும், அனைத்து இடங்களும் பறக்கும் படையின் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த நிலையில், தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மறுவாக்குப்பதிவு நடைபெறும் கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அசத்தல் வெற்றி பெற்ற அமமுக.!: 33 நகராட்சி வார்டுகளில் வெற்றி - ஒரத்தநாடு பேரூராட்சியையும் கைப்பற்றியது

Image
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக மாநகராட்சியில் 3, நகராட்சிகளில் 33, பேரூராட்சிகளில் 66 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை, தஞ்சை, திருச்சி மாநகராட்சிகளில் தலா ஒரு வார்டில் அமமுக வென்றுள்ளது; தஞ்சை ஒரத்தநாடு பேரூராட்சியையும் அமமுக கைப்பற்றியது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, சென்னை, தஞ்சாவூர், திருச்சி மாநகராட்சிகளில் தலா ஒரு வார்டு,33 நகராட்சி வார்டுகள், 66 பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 102 வார்டுகளில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுககைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக அமமுக பொதுச் செயலர் டிடிவி.தினகரன் தனது ட்விட்டர் பதிவில், “ உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியின் பணபலமும், அதிகார பலமும்தான் கொடிகட்டிப் பறக்கும் என்பது தெரிந்திருந்தாலும், ஜெயலலிதாவின் உண்மையான பிள்ளைகளாக, நெஞ்சுரத்துடன் களம்கண்ட அமமுக வேட்பாளர்களுக்கும், அவர்களுக்காகப் பணியாற்றிய தொண்டர்களுக்கும், வெற்றி வாகை சூடியவர்களுக்கும் எனதுமனப்பூர்வமான வாழ்த்துகள். தமிழக மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும்வரை உத்வேகத்துடன் நம் பணியைத் தொடர்வோம்” என்று குற...

எஸ்.டி.பி.ஐ கட்சி சிறப்பான வெற்றி.!

Image
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநகராட்சியில் 1, நகராட்சியில் 5, பேரூராட்சியில் 16 வார்டுகளில் வென்றுள்ளது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியில் இக்கட்சி 4 வார்டுகளை வென்றுள்ளது கோவை மாநகராட்சியில் ஒரு வார்டை வென்றுள்ளது