Posts

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஆலோசனை கூட்டம் ...

Image
  இன்று (30ம்தேதி) கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது, இதையடுத்து கோவில்பட்டியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஆலோசனை கூட்டம் நகராட்சி சேர்மன் கருணாநிதி தலைமையில் நடந்தது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் இன்று (30ம்தேதி) கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதனை முன்னிட்டு கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.  சுகாதார அலுவலர் நாராயணன் வரவேற்றார். கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் பேசுகையில் கொரோனா 4ம் அலை பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் முதல் டோஸ் போட்டு விட்டு 2வது டோஸ் செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதேபோல் இரண்டு தடுப்பூசி செலுத்திய 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். கோவில்பட்டி நகராட்சியை நூறு சதவீதம் தடு...

சேதமடைந்துள்ள அரசு அலுவலக குடியிருப்பை அப்புறப்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் பாஜக கோரிக்கை.!

Image
  கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில்  அமைந்துள்ள அரசு அலுவலக குடியிருப்பு பகுதி மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உயிர் சேதம் ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.அந்த கட்டிடத்தில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி கட்டிடத்தை இடிக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ள அந்த கட்டிடத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி  கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்கட்சி நகரத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  இதில் 20 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்  விஜயகுமார் , அமைப்புசாரா மாவட்ட துணைத்தலைவர் நல்லதம்பி மற்றும் நகர செயலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி பகுதியில் ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு!

Image
தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் செயல்பட்டு வரும் திட்ட பணிகளை தமிழக ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளரும், தூத்துக்குடி மாவட்ட மண்டல அலுவலர் ஊரக வளர்ச்சி துறை (பொறுப்பு) கவிதா ஆய்வு செய்தார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை அலகு உற்பத்தி செய்யப்படும் உர அலகினை பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு பணி செய்யும் பணியாளர்களிடம் கலந்துரையாடினார். அதன் பின்னர், ஊராட்சி அலுவலகம் சென்று அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் பணிகள் குறித்து கேட்டறிந்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொது மயானத்தில் மின்சார எரியூட்டி தகனம் இடத்தினை பார்வையிட்டு மேலும், இதனை செம்மைப்படுத்திட கேட்டுக்கொண்டார். பின்னர் மாப்பிளையூரணி ஊராட்சி பகுதியில், சாலைகளில் பேவர் பிளாக் அமைக்க இருக்கும் இடத்தினையும் பார்வையூட்டார். இந்த ஆய்வில், ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் (தூத்துக்குடி உபகோட்டம்) அமலா ஜெசி ஜாக்குளின், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)...

உணவு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்ப உத்தரவிடுங்கள் - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

Image
கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்கிட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (29-4-2022) முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர் என்றும், ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டு, அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர் என்றும், ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டு, அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும். இது தொடர்பாக, 31-3-2022...

கோவில்பட்டியில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் - கைது செய்யப்பட்ட இளைஞரின் பைக் மற்றும் கடை தீவைத்து எரிப்பு.!

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை மது போதையில் அய்யநேரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து கார்த்திக் தனது நண்பர்கள் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த சின்னமணி, கார்த்திக்  ஆகியோரை அழைத்து வந்து கடலையூரை சேர்ந்த கல்லூரி மாணவர் வைரமுத்து என்பவரை அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தினர்.  இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் வைரமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கார்த்திக் , வீரவாஞ்சி நகரை சேர்ந்த சின்னமணி ,கார்த்திக்  ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இந்த நிலையில் நேற்று இரவு வீரவாஞ்சி நகர் கார்த்திக்  வீட்டின் முன்பு நின்றிருந்த இருசக்கர வாகனத்தினை மர்ம கும்பல் தீவைத்து எரித்து விட்டு தப்பி ஓடியது. இதில் பைக் முற்றிலுமாக சேதமடைந்து விட்டது. மேலும் அந்த கும்பல் கார்த்திக் தந்தை காளிதாஸ் கதிரேசன் கோவில் சாலையில் நடத்திவரும் இறைச்சி கடையையும் தீயிட்டுக் கொளுத்தி விட்டு சென்றுள்ளனர். இறைச்சி கடையும் முற...

3 வருடங்களுக்கு முன்பு காணாமல்போனவரை கண்டுபிடித்து மனைவியிடம் ஒப்படைத்த கழுகுமலை போலீசார் - எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு.!

Image
கழுகுமலை முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த முத்துவேல் மகன் சின்னத்தம்பி (43) என்பவர்  கடந்த 15.08.2018 அன்று காணாமல் போனதாக அவரது மனைவி கலா (39) என்பவர் அளித்த புகாரின் பேரில கழுகுமலை காவல் நிலைய போலீசார் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்து மேற்படி காணாமல்போன சின்னத்தம்பியை விசாரணை மேற்கொண்டு தேடி வந்தனர்.  இந்நிலையில் கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், தலைமை காவலர் கண்ணன் மற்றும் கழுகுமலை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சுப்புராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இன்று (29.04.2022) கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்படி காணாமல்போன சின்னத்தம்பி என்பது தெரியவந்தது, உடனே போலீசார் அவரை மீட்டு நிலையம் கொண்டு வந்து அவரின் மனைவி கலாவிடம் ஒப்படைத்தனர். 3 வருடமாக காணாமல்போன சின்னத்தம்பியை கண்டுபிடித்து மீட்டு அவரது மனைவியிடம் ஒப்படைத்த கழுகுமலை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  எல். பாலாஜி சரவணன்  பாராட்டினார்.

"ஹிந்தி பேச முடியாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்" - உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், சர்ச்சை கருத்து.

Image
உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தி மொழி குறித்துக் கூறிய கருத்து தேசிய அளவில் பெரும் விவாதத்துக்கு வித்திட்டது. அதைத் தொடர்ந்து நடிகர் கிச்சா சுதீப், அஜய் தேவ்கன் இருவருக்குமிடையில் அண்மையில் ட்விட்டரில் இந்தி மொழி குறித்து உரையாடல் நடைபெற்றது. இதில் அஜய் தேவ்கன் `இந்திதான் இந்தியாவின் தேசியமொழி’ என்று கூறினார். இதற்கு கிச்சா சுதீப், `மற்ற மொழிகளைப்போல இந்தியாவின் ஒரு மொழிதான் இந்தி’ எனக் கூறினார். இவர்களின் இந்தக் கருத்து பகிர்வு இந்திய அளவில் ஹாட் டாப்பிக்காக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இந்திக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், "இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் இந்தியை நேசிக்க வேண்டும். நீங்கள் இந்தியை நேசிக்கவில்லையென்றால், நீங்கள் ஒரு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புடையவர் என்று கருதப்படுவீர்கள். இந்தி பேச முடியாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேறி வேறு எங்காவத...