Posts

படகில் இலங்கைக்கு கடத்தவிருந்த 4,430 வலி நிவாரண மாத்திரைகள் - க்யூ பிரிவு போலீஸார் பறிமுதல்!

Image
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த ப்ரீகபலின் 150mg மாத்திரை சுமார் 443 அட்டைகளில்(4430) வலி நிவாரண மாத்திரைகள் வள்ளத்தையும் க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மாத்திரைகள் கடத்தல் நடக்க இருப்பதாக க்யூ பிரிவு போலிசாருக்கு தகவல் கிடைத்தது.  தகவல் கிடைத்ததின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி, தர்மராஜ், சிறப்பு உதவியாளர் மாரி ஆகியோர் திரேஸ்புரம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு பதிவு எண் இல்லாமல் இருந்த வள்ளத்தை சோதனை செய்த போது இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 443 அட்டைகளில்(4430) வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  மேற்படி வள்ளத்தில் உள்ளவர்கள் தப்பிசென்றதால் வள்ளத்தையும் பறிமுதல் செய்து, மாத்திரைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஓப்படைத்தனர். இதே போன்று கஞ்சா, புகையிலை, மஞ்சள், ஏலக்காய் களைக்கொல்லி மருந்து என கடத்தி வந்த நிலையில் தற்பொழுது மாத்திரைகளையும் கடத்துவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. ப்ரீகபலின் 150mg மாத...

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலி.! -30 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

Image
  அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலியாகினர். பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் போட்டாட், பாவ்நகர், அகமதாபாத் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அங்கு சட்டவிரோத மது விற்பனை, கள்ளச் சாராய விற்பனை நடைபெறுகிறது. அவ்வப்போது இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனையும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் அகமதாபாத் மாவட்டம் மற்றும் போட்டட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் தொழிலாளர்கள். ஞாயிற்றுக்கிழமை இரவு ரோஜித் கிராமத்தில் ஹூச் குடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரது கணவரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது என்று சிகிச்சைய...

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.!

Image
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரம் தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5ம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2022 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.  எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிவுச் சட்டத்தின்படி (Negotiable Instruments act) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.  இந்த விடுமுறைக்கு பதிலாக 13.08.2022 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.

தட்டார்மடம் அருகே அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது.!

Image
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் பவுலோஸ் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் டேவிட் கிறிஸ்துராஜ் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது,  பூலையாபுரம் பகுதி பேருந்து நிறுத்தம் அருகில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் சாத்தான்குளம் முதலூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் லிவிங்ஸ்டன் சாமுவேல் (எ) பட்டு (25) மற்றும்  சாத்தான்குளம் சன்னதி தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஆண்டன் வின்ஸ்டன் (20) என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது உடனே போலீசார் லிவிங்ஸ்டன் சாமுவேல் (எ) பட்டு மற்றும் ஆண்டன் வின்ஸ்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட லிவிங்ஸ்டன் சாமுவேல் (எ) பட்டு மீது தட்டார்மடம், நாசரேத் மற்றும் சாத்தான்குளம் ஆகிய காவல் நிலையங்களில் 5 வழக்குகள...

விலைவாசி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக விவாதம் கேட்டதால் திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட்.!

Image
விலைவாசி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக விவாதம் கோரி தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி சோமு,எம் சண்முகம், என்ஆர் இளங்கோ,கிரிராஜன் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு குறித்து அவையின் மையப்பகுதியில் முழக்கமிட்டதால் தி.மு.க. எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி சோமு உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 11 பேரை இந்த வாரம் முழுவதும் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு

கஞ்சா அடித்தால் குற்றங்கள் அதிகரிக்காது.! - சட்டீஸ்கர் பாஜக எம்.எல்.ஏ பகீர் அட்வைஸ்!

Image
  "பாலியல் பலாத்காரம், கொலை போன்ற குற்றங்கள் மதுப்பழக்கத்தால் அதிகரிக்கிறது; கஞ்சா அடித்தால் அந்த குற்றங்கள் அதிகரிக்காது; எனவே மதுபானத்தை தவிர்த்து கஞ்சா பயன்படுத்துங்கள்” என சத்தீஸ்கர் மாநில பாஜக எம்.எல்.ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி கருத்தால் சர்ச்சை! பாஜக எம்எல்ஏவின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்.

கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலெட்சுமி திடீர் மாற்றம் - காத்திருப்போர் பட்டியலில் வைப்பு

Image
அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேசனை கள்ளக்குறிச்சிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு