தட்டார்மடம் அருகே அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது.!


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் பவுலோஸ் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் டேவிட் கிறிஸ்துராஜ் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, 

பூலையாபுரம் பகுதி பேருந்து நிறுத்தம் அருகில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் சாத்தான்குளம் முதலூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் லிவிங்ஸ்டன் சாமுவேல் (எ) பட்டு (25) மற்றும் 

சாத்தான்குளம் சன்னதி தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஆண்டன் வின்ஸ்டன் (20) என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது

உடனே போலீசார் லிவிங்ஸ்டன் சாமுவேல் (எ) பட்டு மற்றும் ஆண்டன் வின்ஸ்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட லிவிங்ஸ்டன் சாமுவேல் (எ) பட்டு மீது தட்டார்மடம், நாசரேத் மற்றும் சாத்தான்குளம் ஆகிய காவல் நிலையங்களில் 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!