புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது நேரு வீதிக்கு ஷாப்பிங் வரவே அஞ்சும் அளவு வாகனங்களை நிறுத்த இடமின்றி தத்தளிக்கும் நிலை நீண்ட நேரம் தேடியும் இடமின்றி, அவசரத்திற்கு வாகனங்களை ஒரிடத்தில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால், டிராபிக் ஜாம் ஆகி போலீஸார் வாகனங்களை பறிமுதல் செய்யும் நிலை. இது தான் எல்லோரும் அறிந்த பொது மக்களின் இன்றைய அவல நிலை. அதற்கு ஒரு படி மேல், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சியை நம்பி, இங்கு வரும் வெளிமாநில பயணிகள் வாகன நிறுத்த இடமின்றி படும் பாடு சொல்லி மாளாது. இங்கு ஷாப்பிங்கையே வெறுத்து விட்டு, ஏதோ சுற்றி பார்த்து விட்டு சென்று விடுகின்றனர். அவர்களையெல்லாம் நம்பி, பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் வியாபாரம் செய்ய வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு, சரக்குகளை பல லட்சங்கள் விலை கொடுத்து வாங்கி, ஆவலோடு காத்திருக்கும் வியாபாரிகளின் நிலை அதை விட பரிதாபம். வாடிக்கையாளர்கள் யாரும் வீட்டிலிருந்து நடத்து வருவதில்லை. பெரும்பாலும் சொந்த வாகனங்களில் தான் வருகிறார்கள், அப்படி வரக்கூடியவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி, ஷாப்பிங் ...