Posts

நாளை காலை 10.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்கிறது அறுமுகசாமி ஆணையம்.!*

Image
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் முதலமைச்சரை நேரில் சந்தித்து அறிக்கையை வழங்குகிறது

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத்.!*

Image
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவிப்பு ராகுல் காந்தி அரசியலுக்கு நுழைந்த பிறகு கட்சியில் நிலவிய கலந்த ஆலோசனை வழிமுறையை முற்றிலும் அழித்து விட்டார் 2014 ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையே முக்கிய காரணம். காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி பெயரளவில் மட்டுமே தலைவராக இருக்கிறார் கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல் காந்தி அல்லது ராகுல் காந்தியின் பிஏ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளாலேயே எடுக்கப்படுகிறது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை.!

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் குடியிருப்பவர் ஆறுமுகம் (வயது 73). இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவனையில் அனுமதித்துள்ளனர்.  இதனால் வீட்டை பூட்டிவிட்டு மனைவிக்கு உதவியாக ஆறுமுகமும் மருத்துவமனையில் இருந்து வந்தார். இந்நிலையில் ஆறுமுகம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.  பதறிப்போன அவர் வீட்டிற்குள் சென்றபோது, பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. நகைகள், பணம் கொள்ளை அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் தங்க கம்மல்கள், தங்க காசுகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.  கொள்ளைபோன நகைகள், பணத்தின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இது குறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பெயரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் - 20 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

Image
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையானது குறித்து பேசினார்கள். தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்  தூத்துக்குடி மாநகர பகுதியில் சில இடங்களில் 3 நாட்களும் அதே போல் இரண்டு ஒன்று என நாட்களில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அனைத்து பகுதிகளுக்கும் தினசரி தண்ணீர் கொடுக்க வேண்டும். என்ற இலக்கோடு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல் தமிழக முதல்வர்  தூத்துக்குடி பகுதியில் கடந்த காலத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அந்த பகுதிகளில் வரும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.  அதன்படி இன்னும் ஓரு மாதகாலத்திற்குள் மழை காலம் ஆரம்பித்து விடும் விரைவாக கால்வாய் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மாநகர வளர்ச்சிக்கு பொதுமக்கள் நலன் கருதி எடுக்கும் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் அனைவரும் மு...

ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரம் மக்களை பிரிக்க கூடிய ஒன்றாக உள்ளது - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி.!

Image
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தியின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை குறித்து தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொள்வதற்காக இன்று காலை தூத்துக்குடி ரயில் நிலையம் வருகை தந்தார். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகர தலைவர் முரளிதரன் தலைமையில், கட்சியினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், இந்தியாவை ஒற்றுமைப்படுத்த மக்களை நேசிக்க, எதன் பெயராலும் மக்களை பிரிக்காத வகையில், இந்த பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்பொழுது நாட்டில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு  இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரம் மக்களை பிரிக்க கூடிய ஒன்றாக உள்ளது. நாட்டில் வரலாறு காணாத வகையில் விலை வாசி உயர்ந்து இருக்கிறது. அமெரிக்கர் டாலர் இப்போது 80 ரூபாய் வரை வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொட்ட நிலையில் உள்ளது. காரணம், தவறான பொருளாதார கொள்கை தான், விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வருமானம் வருவதாக, மோடி சொன்னார் அதுவும் நடக்கவில்ல...

நெரிசலில் நேரு வீதி!! புலம்பும் பொதுமக்கள்! மன உளைச்சலில் வியாபாரிகள்! விரைந்து நடவடிக்கை எடுக்குமா புதுச்சேரி அரசு???

Image
புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது நேரு வீதிக்கு ஷாப்பிங் வரவே அஞ்சும் அளவு வாகனங்களை நிறுத்த இடமின்றி தத்தளிக்கும் நிலை நீண்ட நேரம் தேடியும் இடமின்றி, அவசரத்திற்கு வாகனங்களை ஒரிடத்தில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால், டிராபிக் ஜாம் ஆகி போலீஸார் வாகனங்களை பறிமுதல் செய்யும் நிலை. இது தான் எல்லோரும் அறிந்த பொது மக்களின் இன்றைய அவல நிலை. அதற்கு ஒரு படி மேல், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சியை நம்பி, இங்கு வரும் வெளிமாநில பயணிகள் வாகன நிறுத்த இடமின்றி படும் பாடு சொல்லி மாளாது. இங்கு ஷாப்பிங்கையே வெறுத்து விட்டு, ஏதோ சுற்றி பார்த்து விட்டு சென்று விடுகின்றனர். அவர்களையெல்லாம் நம்பி, பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் வியாபாரம் செய்ய வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு, சரக்குகளை பல லட்சங்கள் விலை கொடுத்து வாங்கி, ஆவலோடு காத்திருக்கும் வியாபாரிகளின் நிலை அதை விட பரிதாபம். வாடிக்கையாளர்கள் யாரும் வீட்டிலிருந்து நடத்து வருவதில்லை. பெரும்பாலும் சொந்த வாகனங்களில் தான் வருகிறார்கள், அப்படி வரக்கூடியவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி,  ஷாப்பிங் ...

சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.167.58 கோடி அரசு நிதி உதவியுடன் திட்டங்கள் திருப்பூரில் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!

Image
தமிழக அரசின் சார்பில் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தலைப்பில் சிறு குறு தொழில்துறை மண்டல மாநாடு திருமுருகன்பூண்டி பாப்பிஸ் விஸ்டா ஹோட்டலில் இன்று காலை நடைபெறறது.  இதில் கலந்துகொண்டு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இதற்காக திருப்பூர் 60 அடி ரோடு பகுதியில் இருந்து பூண்டியில் உள்ள பாப்பீஸ் ஹோட்டல் வரை வந்த அவருக்கு திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா அரங்கில் மு.க.ஸ்டாலின போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.167.58 கோடி அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட இருக்கும் பல திட்டங்களை தொடங்கி வைத்தும் , பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் , தொழில்முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் முக.ஸ்டாலின் வழங்கினார்.  தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம், தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி ...