Posts

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்.!

Image
  கலவரம் தொடர்பாக அப்போதைய ஆட்சியரை விசாரிக்கவும் 17 காவல் அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரை.

தேசிய ஆயுர்வேத தினத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர்களுக்கான மருத்துவ முகாம்

Image
ம த்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்  இயக்குனர் ஆணைப்படி கோவை, திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவுலர்  வழிகாட்டல் படி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் இணைத்து ஏழாவது தேசிய ஆயுர்வேத தினம் கொண்டாடப்பட்டது.  105 ஆர்.ஏ.எப்., சி.ஆர். பி. எப்.,  வெள்ளலூர் முகாமில் கொண்டாடப்பட்டது. இதில் 105 விரைவு அதிரடிப் படை கமாண்டன்ட் .சஜித் குமார்,  தலைமை மருத்துவ அதிகாரி கே. முஹம்மத் அக்பர் , துணை கமண்டன்ட் வி. ஜெயமாதவன்,  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வெள்ளலூர்  மருத்துவ அலுவலர்் பாலச்சந்தர் ,  இம்ப்காப்ஸ் துறையின் தலைவர்.  கண்ணன் ஆகியவர்கள் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஆயுர்வேத துறையின் சிறப்பு அமசமான பஞ்சகர்மா பற்றி விளக்கப்படம் மற்றும் உருவப்படங்களுடன் விளக்கப்பட்டது. மேலும் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள அறுவை சிகிச்சை முறைகள் ( க்ஷார சூத்ரம்) பற்றியும் விளக்கப்பட்டது. மூலிகை தாவரங்கள் மற்றும் ஆயுர்வேத மருந்தின் மூல பொருட்கள் பொருட்கள் கண்கா...

திருப்பூர் மாவட்ட தடகளத்தில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் சாதனை

Image
திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் டீ பப்ளிக் பள்ளியில்இரண்டு நாட்கள் நடைபெற்றது.  இப்போட்டியில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இப்போட்டியானது 10 வயதுக்குட்பட்டோர் முதல் 19 வயதுக்குட்பட்டோர் வரை நடைபெற்றது.  இப்போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவியர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகைச் சூடினர். 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தனிஷ் 10 புள்ளிகளும், 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஜோ ஜெஃப்ரி 14 புள்ளிகளும் பெற்று தனி நபர் சாம்பியஷிப் பட்டத்தை வென்று சாதனை புரிந்தனர்.  மேலும் 19 வயதுட்பட்டோருக்கான போட்டியில் மாணவர் சண்முகம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் 400மீ, 800மீ என அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றார். 10 வயதுக்குட்பட்டோர் முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் மற்றும் 100மீ, 200மீ, 400மீ, 600மீ மற்றும் 800மீ ஓட்டம் முதலான போட்டிகளில் மாணவ, மாணவியர்கள...

விவேகானந்தா பள்ளியில் தீ தடுப்பு செயல்முறை விளக்க பயிற்சி

Image
திருப்பூர் கே செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா  பள்ளியில் திருப்பூர் தெற்கு தீயணைப்பு மீட்புத்துறை வீரர்கள் சார்பில் தீ தடுப்பு செயல்முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் தீயின் வகைகள் அவை பரவினால் அதை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் செயல்முறை விளக்கம் தந்தனர்.  மேலும் தீ விபத்தினால் காயம் அடைந்தவர்களை எப்படி கொண்டு செல்வது என்றும் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் வி.மோகன் மற்றும் அவரது குழுவினர் 11 பேர் பங்கு கொண்டு தேசிய மாணவர் படை மாணவர்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்தனர்.  இந்நிகழ்வில் பள்ளியின் துணைத் தலைவர் எஸ் தியாகராஜன் பள்ளியின் மூத்த முதல்வர் டி.மணிகண்டன், முதல்வர் சின்னையா, துணை முதல்வர் ரவி, கல்வி அதிகாரி ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வை நமது பள்ளியில் தேசிய மாணவர் படையின் அதிகாரி சிவக்குமார் வழி நடத்தினார்.

பண்ணைக்குட்டையில் மூழ்கி சிறுவன் பலி... காப்பாற்ற சென்ற தாயும் பலியான பரிதாபம்

Image
 குட்டை நீரில் வழுக்கி விழுந்த மகனை காப்பாற்ற சென்ற போது மகனுடன் சேர்ந்து தாயும் பரிதாபமாக பலியானார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோவிந்தாபுரம் கிராமம் சின்னக்கம்பாளையம் பிரிவு அருகே விவசாய தோட்டத்தில் வசிப்பவர் சக்திவேல் (வயது 35).  இவரது மனைவி கலாமணி (27)  இவர்களுக்கு வினூதட்சன்  என்ற  ஒன்பது வயது மகன் உள்ளார் வினு தட்சன் கோவிந்தாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.  இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை இவர்களது விவசாயத் தோட்டத்தில் செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த விவசாய பாசன நீர் குட்டையில் இயங்கிக் கொண்டிருந்த மின்மோட்டாரை ஆப் செய்வதற்காக கலாமணியும் மகன் வினுதட்சன் சென்றனர்.  அப்போது வினுதட்சன் பண்ணை குட்டையின் சுவர் மீது ஏறி உள்ளே எட்டிப் பார்த்தபோது தவறி தண்ணீரில் விழுந்தார். இதை பார்த்த கலாமணி மகனைக் காப்பாற்ற அவரும் நீர் குட்டையில் உள்ளே இறங்கினார். இதில் தாய் மகன் இருவரும் நிலை தடுமாறி குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.  சம்பவத்தை சிறிது தொலைவில் இருந்து தண்ணீர் பாய்ந்து க...

மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளுக்கு 32 ஜே.சி.பி., 8 டிராக்டர் இயந்திரங்கள்... மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்

Image
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை காலத்தை  முன்னிட்டு சேதமடையும் சாலைகள் கால்வாய்கள் ஆகியவற்றை சீரமைப்பதற்காக  32 ஜே,சி,பி,ம் 8 டிராக்டர் உட்பட,மற்றும் 64 வேலையாட்கள் ஆகியவை மண்டல வாரியாக பிரித்து தரப்பட்டன. இவை அந்தந்த பகுதிகளில் நீர்வழிகள், தண்ணீர் செல்லும் கால்வாய்கள் போன்றவற்றை சீர்படுத்தி வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை முன்னெச்சரிக்கையாக தடுப்பதற்காக பணிகளை மேற்கொள்ளும். இந்த நிலையில், இந்த இயந்திரங்களை மேயர் ந.தினேஷ்குமார்   பணிகளை துவைக்கி வைத்து போர்க்கால அடிப்படையில் மக்கள் சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் மண்டல  தலைவர்கள் பத்மநாபன், கோவிந்தராஜ் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர். 

மழையால் வியாபாரம் போச்... திருப்பூர் கடைக்காரர்கள் பாவம்!

Image
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மழை காரணமாக ஞாயிறு தின வியாபாரம் முடங்கி கடை வீதிகள் வெறிச்சோடியது.  திருப்பூர் மாநகரம் பனியன் தொழில் நகரமாக இருப்பதால், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில மக்கள் வசிக்கிறார்கள். இதனால் தீபாவளிக்கு முந்தைய இரண்டு வாரங்கள் கடைவீதிகளில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் திருப்பூர் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், குமரன் ரோடு, புதுமார்க்கெட் வீதி, முனிசிபல் வீதி, பி.என்., ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தடுப்பு அரண்களை அமைத்து உள்ளார்கள்.  இந்த சூழ்நிலையில், காலை 11 மணியளவில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில் கூட்டம் தொடங்கியது. அதற்குள்ளாகவே 12 மணியளவில் மாநகரில் பல இடங்களில் மழை பெய்தது.இதனால் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் அவசரமாக கிளம்பி வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் மழை காரணமாக கடைவீதிகளுக்கு பொரு...