திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் டீ பப்ளிக் பள்ளியில்இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இப்போட்டியானது 10 வயதுக்குட்பட்டோர் முதல் 19 வயதுக்குட்பட்டோர் வரை நடைபெற்றது. இப்போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவியர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகைச் சூடினர். 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தனிஷ் 10 புள்ளிகளும், 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஜோ ஜெஃப்ரி 14 புள்ளிகளும் பெற்று தனி நபர் சாம்பியஷிப் பட்டத்தை வென்று சாதனை புரிந்தனர். மேலும் 19 வயதுட்பட்டோருக்கான போட்டியில் மாணவர் சண்முகம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் 400மீ, 800மீ என அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றார். 10 வயதுக்குட்பட்டோர் முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் மற்றும் 100மீ, 200மீ, 400மீ, 600மீ மற்றும் 800மீ ஓட்டம் முதலான போட்டிகளில் மாணவ, மாணவியர்கள...