அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களிடம் ரூ.36 கோடி மோசடி - தொண்டு நிறுவன இயக்குநர் கைது!!

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களிடம் ரூ.36 கோடி மோசடி - தொண்டு நிறுவன இயக்குநர் கைது!! தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.36 கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் முப்பிலிவெட்டி பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் மனைவி சண்முகலட்சுமி (33) என்பவரிடம் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமரேசன் (46) மற்றும் சிலர் தாங்கள் நடத்தி வரும் ஆதவா தொண்டு நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தால் நல்ல சம்பளத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாகவும், நீங்கள் தரும் பணத்திற்கு லைஃப் இன்சூரன்ஸ் காப்பீடு, 15 வருட முடிவில் முதிர்வு தொகையுடன் சேர்த்து திருப்பி தந்து விடுவதாகவும், வேலையை விட்டு நின்றால் மேற்படி டெபாசிட் தொகையை திருப்பி தரப்படும் என்றும், 58 வயது வரை அரசு பள்ளிகளில் வேலை செய்யலாம் என்றும் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறியதன் பேரில் மேற்படி சண்முகலட்சுமி ரூப...