Posts

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொமாரபாளையம் ஊராட்சியில், சிறப்பு கிராம சபை கூட்டம். ஈரோடு மாவட்ட, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பங்கேற்பு.

Image
கிராமங்களே,  நாட்டின் முதுகெலும்பு. கிராம வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதை மையமாகக் கொண்டு,அடித் தட்டு மக்களின் ஜனநாயக உரிமை களை எதிரொலிக்கும், கிராமசபை கூட்டங்கள் ஆண்டு தோறும் ஆறு முறை நடைபெறுவது வழக்கம், மேலும் கிராம வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசு திட்டங்களை செயல் படுத்திட சிறப்பு கிராமசபை கூட்டங் களும் நடைபெறும்.அதே போல், அரசின் அறிவிப்பு மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி,சிறப்பு கிராம சபை கூட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமார பாளை யம்  ஊராட்சியில். ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன் தலைமையில்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ். ரமேஷ், முன்னிலையில் நடைபெற்றது.  கூட்டத்தில்,ஈரோடு மாவட்ட ஊராட்சி களின் உதவி இயக்குனர் உமாசங்கர் சிறப்பு பார்வையாளராக, பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தைப் பற்றியும், அரசின் வளர்ச்சி திட்டங்கள் பற்றியும், விரிவாக எடுத்துக் கூறியும், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற,பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் பேசினார்.  கூட்டத்தில்,சத்தியமங்க...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், மாக்கினாங் கோம்பை ஊராட்சியில், சிறப்பு கிராம சபை கூட்டம்.

Image
அடித்தட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை எதிரொலிக்கும் கிராமசபை கூட்டங்கள் ஆண்டு தோறும் ஆறு முறை நடைபெறுவது வழக்கம், மேலும் அரசால், அவ்வப் போது அறிவிக்கப்படும்  கிராம வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்திட சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெறும். அதேபோல், அரசின் அறிவிப்பின்படி,  கலைஞரின் கனவு இல்ல திட்டம் தொடர்பான, சிறப்பு கிராம சபை கூட்டம்,  மாக்கினாங்கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு.கே. ஈஸ்வரன்தலைமையில்.நடைபெற்றது கூட்டத்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சாமி கலைஞரின் கனவு இல்ல திட்டம் குறித்தும்,பழுதடைந்த அரசு வீடுகள் பராமரிப்பு குறித்தும், அரசு மேற்க் கொண்டுள்ள  நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.கடத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல் ஊராட்சி பகுதியில், போதை ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் அதன் தீங்கு பற்றிய விழிப்புணர்வு குறித்து, பொதுமக்களிடம் பேசினார்.  கூட்டத்தில்,ஊராட்சி மன்ற உறுப் பினர்கள் பண்ணாரி , சுக்கான் மற்றும் ஏராளமான பொதுமக்கள...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி பகுதி ஊராட்சிகளில், நாளை சிறப்பு கிராமசபை கூட்டம்..

Image
 அடித்தட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை எதிரொலிக்கும் கிராமசபை கூட்டங்கள் ஆண்டு தோறும் ஆறு முறை நடைபெறுவது வழக்கம், மேலும் கிராம வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்திட சிறப்பு கிராமசபை கூட்டங்களும்நடைபெறும்.அதேபோல், கலைஞரின் கனவு இல்ல திட்டம் 2024-25 மற்றும் அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்டு, பழுதடைந்த குடியிருப்புகள் பராமரிப்பு செய்தல் 2024 - 25 திட்டத்தின் கீழ், கிராம அளவிலான குழுக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியலை, கிராம சபையில் பொதுமக்களின் பார்வையில் வைத்து, ஒப்புதல் பெறுவதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சி கள் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சி கள் மற்றும் தாளவாடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

கோரிக்கை நிறைவேறியது மயிலாடுதுறை தீப்பாய்ந்தம்மன் எரிவாயு தகன சுடுகாட்டில் 220 அடியில் போர்வெல் அமைப்பு தண்ணீர் பற்றாக்குறை நீக்கம் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் நன்றி

Image
கோரிக்கை நிறைவேறியது! *மயிலாடுதுறை தீப்பாய்ந்தம்மன் எரிவாயு தகன சுடுகாட்டில் 220 அடியில் போர்வெல் அமைப்பு! தண்ணீர் பற்றாக்குறை நீக்கம்! சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் நன்றி!**   மயிலாடுதுறை தீப்பாய்ந்தம்மன் தகன எரிவாயு சுடுகாட்டில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் இன்றி துக்க காரியத்திற்கு வருகின்றவர்கள் பெரும் அவதி உற்றார்கள். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்மோட்டாரை மீண்டும் இயக்கிடவோ அல்லது புதிய போர்வெல் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை வைத்திருந்தார். அக்கோரிக்கை செய்தி கடந்த தினத்தந்தி 10-6-2024 மற்றும் தினகரன் நாளேட்டில் 11-6-2024 ல் மயிலாடுதுறை எரிவாயு சுடுகாட்டில் தண்ணீர் பற்றாக்குறை! இறுதி சடங்கு செய்ய முடியாமல் அவதி என்னும் தலைப்பில் செய்தி வெளியானதை அடுத்து உடனடியாக நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 220 அடி ஆழத்தில் போர்வெல் புதிதாக அமைக்கப்பட்டு தற்பொழுது முழுமையாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பிரேதங்களை இறுதிச் சடங்குகளை செய்து எரியூட்டும் துக்க நிகழ்ச்சிகளுக்கு வருகின்றவர்களும் உறவினர்களும...

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் உள்ள பள்ளங்களை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பெரும் முயற்சியில் நகர் மன்ற உறுப்பினர் மணிவண்ணன், என்ஜிஎஸ். குருசங்கர் மற்றும் ஜிகே ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் சிமெண்ட் கான்கிரீட் கலவை கொண்டு மூடப்பட்டது

Image
*மயிலாடுதுறை அரசு மருத்துவமனை ஜிஎச் சாலையில் உள்ள பள்ளங்களை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பெரும் முயற்சியில் நகர் மன்ற உறுப்பினர் மணிவண்ணன், என்ஜிஎஸ். குருசங்கர் மற்றும் ஜிகே ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் JCP எந்திரம் மற்றும் 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பேருதவியுடன் சிமெண்ட் கான்கிரீட் கலவை கொண்டு மூடப்பட்டது!* *மக்கள் பெரும் மகிழ்ச்சி!*   மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தினசரி வருகை தரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் அச்சாலையைக் கடக்கும் அனைத்து வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றன என்பதாலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கீழே விழும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுவதாலும் மயிலாடுதுறை தொகுதியின் வடக்கு பகுதியை முழுமையாக இணைக்க கூடிய இச்சாலை பள்ளங்கள் இன்றி அமைக்கப்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். இச்சாலையின் அவசியம் மிகவும் முக்கியமானதாக உள்ளதால் பல மாதங்களாக இப்பள்ளங்கள் மூடப்படாததால் கேட்பாரற்ற நிலையிலும் உள்ளதால் மக்களின் நலன் கருதி உடனடியாக இச்சாலையை மேம்படுத்திடவும் பள்ளங்களை உடனடியாக மூட...

இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை புரோசான் மால் சார்பாக மாரத்தான் போட்டி

Image
இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை புரோசான் மால் சார்பாக மாரத்தான் போட்டி.. வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள இதில்,சினிமா பிரபலங்கள் உட்பட ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக புரோசோன் நிர்வாகத்தினர் தகவல்… கோவை சத்தி சாலையில் உள்ள சரவணம்பட்டி அருகே புரோஜோன் மால் சார்பாக கோ க்ரீன் மாரத்தான் (GO Green Marathon) தொடர் ஓட்ட நிகழ்வு வருகின்ற ஜூன் 30-ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்களிடையே இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற உள்ள, இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் டி-ஷர்ட் அறிமுக விழா புரோஜோன் மாலில் நடைபெற்றது. இதில் புரோசோன் மால் நிர்வாக அதிகாரிகள் விஜய் பாட்டியா,பாபு,பிரிங்ஸ்டன் நாதன்,முஷம்மல்,சுபத்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தான் டி ஷர்ட்டை அறிமுகம் செய்து வைத்து பேசினர்.ஜூலை 30ந்தேதி நடைபெற உள்ள,போட்டயை கோவை மாநகர காவல்திறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைப்பதாக கூறிய அவர், மாரத்தான் போட்டியில் பல்வேறு திரை பிரபலங்கள்,முக்கியஸ்தர்கள் என ...

சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு துவக்க விழா

Image
சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் 16வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 105 வது வட்டம் சார்பாக கொடி ஏற்றி பெயர் பலகை திறந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட நகர ஒன்றிய மற்றும் தொகுதி நிர்வாகிகள்  தலைமை தாங்கி நிகழ்ச்சியை நடத்தினர்  105வது வட்ட தலைவர் சாகுல் ஹமீது முன்னிலையில் வட்ட நிர்வாகிகள் படைசூழ பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இனிப்புகள் பெற்று கொண்டு சிறப்பித்தனர்