எம்.சாண்ட், ஜல்லி விலை உயர்வு... 250 டிப்பர் லாரிகள் வேலை நிறுத்தம்!

திருப்பூரில் எம் சாண்ட், யூனிட் ஆயிரம் ரூபாய் உயர்த்தியதை கண்டித்தும், உடனடியாக விலையேற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் திருப்பூர் ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை, நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் எனவும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயக்கபடாது என ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத் செயலாளர் மூர்த்தி பேட்டி அளித்தார். திருப்பூர் ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் சங்கத்தின் செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்டுமான பணிக்கு மிகவும் தேவையான மணல் குவாரிகள் இயங்காத சூழ்நிலையை பயன்படுத்தி செயற்கை மணல் தயாரிக்கும் எம் சாண்ட் கிரஷர்கள் கடுமையான விலை உயர்வை திட்டமிட்டு ஏற்படுத்தி வருவதாக ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத் செயலாளர் மூர்த்தி தெரிவித்தார். மேலு...