தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு.!
தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த வடகிழக்கு தொடர் மழையால் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்குவதாக தூத்துக்குடி மாநகரம் திரேஸ்புரம் பகுதிக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொது மக்களிடம் இருந்து தகவல் வந்ததையடுத்து, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை தூர்வார உடனடியாக ஏற்பாடு செய்ததுடன், அதிக திறன் கொண்ட மின் மோட்டார்களை ஏற்பாடு செய்து வரவழைத்து தேங்கிய வெள்ள நீர் வெளியேறுவதற்கு வழிவகை செய்து கொடுத்தார். உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் எமல்டன், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், மார்ஷல், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.