Posts

முத்துநகர் கடற்கரையில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரிப்பு.!

Image
  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிாி உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வந்த பொதுமக்களிடம் வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார்.  அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், வட்டச்செயலாளர் மரிய ஆன்ஸ், கவுன்சிலா் எடின்டா, காங்கிரஸ் வட்டத்தலைவர் மோகன், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லபாண்டியன் பேச்சு.!

Image
  தூத்துக்குடி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லபாண்டியன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார்.  அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட அனைத்து நலத் திட்டங்களையும், அதிமுக தேர்தல் அறிக்கைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.  கூட்டத்தில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆறுமுகநயினார், மாநில பேச்சாளர் கருணாநிதி, வர்த்தகரணி துணைச் செயலாளர் ராஜா, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, பாஜக நிர்வாகிகள் விவேகம் ரமேஷ், ராஜேஷ், அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் ஷெரினா பாக்யராஜ், துணைச் செயலாளர் சந்தனம் அமமுக மாவட்ட செயலாளர் ஜானியேல் சாலமோன் மணிராஜ், நவஜீவன் பெரியசாமி, தமாகா மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், பாமக லட்சுமணன், தமமுக லாரன்ஸ், புரட்சி பாரதம் மாரிசெல்வம், அதிமுக சார்பு அணி நிர்வாகிகள் ராஜா, பெருமாள், வீரபாகு, நடராஜன், தனராஜ், பில்லா விக்னேஷ், துரைசிங், விஜயகுமார் மற்றும் பகுதிச் செயலா...

தூத்துக்குடியில் கீதா ஜீவன், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் ஜி வி மார்கண்டேயன் மீண்டும் போட்டி: திமுக வேட்பாளர் பட்டியல்!

Image
  தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்த நிலையில், திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஜி.வி. மார்கண்டேயன் ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக வேட்பாளர்கள் விவரம்: தூத்துக்குடி மாவட்டம்     தூத்துக்குடி: கீதா ஜீவன்     திருச்செந்தூர்: அனிதா ராதாகிருஷ்ணன்     விளாத்திகுளம்: ஜி.வி. மார்கண்டேயன்     ஓட்டப்பிடாரம் (தனி): பி.எம். ராமஜெயம்     கோயில்பட்டி: கா. கருணாநிதி தென்காசி மாவட்டம்:     தென்காசி: டாக்டர் கலை கதிரவன்     வாசுதேவநல்லூர் (தனி): ஈ. ராஜா     ஆலங்குளம்: முனைவர் பால் மனோஜ் பாண்டியன் திருநெல்வேலி & கன்னியாகுமரி மாவட்டங்கள்:     திருநெல்வேலி: சு. சுப்பிர...

தூத்துக்குடி மாநகா் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் நியமனம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.!

Image
தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தூத்துக்குடி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் நியமணம் செய்யப்பட்டுள்ளாா்.  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் சித.செல்லப்பாண்டியனுக்கு தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டு பின்னா் முத்துராமலிங்க தேவா் அம்ேபத்காா் பொியாா் குரூஸ்பா்னாந்து காமராஜா் வஉசி அண்ணா எம்.ஜி.ஆா் உள்ளிட்ட பல தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்து வணங்கினாா்.  இதில் அதிமுக பாஜக உள்பட என்டிஏ கூட்டணி கட்சியை சேர்ந்த நிா்வாகிகள் தொண்டா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம் அஇஅதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Image
  தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக 168 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது. அதன்படி, முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கு அதிமுக கடந்த சில நாட்களுக்குமுன் வேட்பாளர்களை அறிவித்தது. இந்நிலையில், 2ம் கட்டமாக 127 தொகுதிகளுக்கு அதிமுக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் விளாத்திகுளம் : அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் R. சத்யா, B.Sc., தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவர் தூத்துக்குடி :சி.த. செல்லப்பாண்டியன், M.A., கழக வர்த்தக அணிச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஸ்ரீவைகுண்டம்  :S.P. சண்முகநாதன் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

169 தொகுதிகளில் அதிமுக போட்டி.. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் - முழு விவரம்

Image
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் யாருக்கு எந்த தொகுதி என்பதும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. சென்னையில் இன்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அப்போது நைனார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் உடனிருந்தனர். கட்சிகள் போட்டியிடும் விவரம்:   பாஜக (27 தொகுதிகள்) மயிலாப்பூர் தளி முடக்குறிச்சி உதகமண்டலம் அவிநாசி திருப்பூர் தெற்கு கோவை வடக்கு கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை திருப்பத்தூர் மதுரை தெற்கு சாத்தூர் திருச்செந்தூர் வாசுதேவநல்லூர் ராதாபுரம் நாகர்கோவில் விளவங்கோடு ஆவடி திருவண்ணாமலை தஞ்சாவூர் திருவாரூர் அறந்தாங்கி மானாமதுரை ராமநாதபுரம் குளச்சல் பத்மநாபபுரம் ராசிபுரம் (தனி) பாமக (18 தொகுதிகள்) சேலம் மேற்கு தர்மபுரி பென்னாகரம...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு- ஏப்ரல் 9ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும்!

Image
  சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேருக்கும் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தீர்ப்பு