அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம் அஇஅதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக 168 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது.
அதன்படி, முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கு அதிமுக கடந்த சில நாட்களுக்குமுன் வேட்பாளர்களை அறிவித்தது.
இந்நிலையில், 2ம் கட்டமாக 127 தொகுதிகளுக்கு அதிமுக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் விளாத்திகுளம் : அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்
R. சத்யா, B.Sc., தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவர்
தூத்துக்குடி :சி.த. செல்லப்பாண்டியன், M.A., கழக வர்த்தக அணிச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
ஸ்ரீவைகுண்டம் :S.P. சண்முகநாதன் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
