கோவை, தேனி கலெக்டர்கள் உள்பட 30 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்!
.jpeg)
தமிழக முழுவதும் 30 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டிருக்கிறது. இதில் திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த கிராந்தி குமார் பாடி கோவை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கடலூர் ரூரல் டெவலப்மென்ட் உதவி கலெகடராக பணியாற்றி வந்த பவன்குமார் கிரியப்பவாணர் நியமிக்கப்படுகிறார். சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக பணியாற்றி வந்த ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு மருத்துவ கழக மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த தீபக் ஜேக்கப் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். விருத்தாச்சலம் சப் கலெக்டராக பணியாற்றி வந்த பழனி விழுப்புரம் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். சென்னை கன்னியாகுமரி இண்டஸ்ட்ரியல் கார...