தூத்துக்குடி: சிசிடிவி மூலம் அம்பலமான இளம் சிறார்களின் திருட்டு.! -நடவடிக்கை எடுக்குமா காவல்துறை.?
நேற்று முன்தினம் (18/03/2026) பக்கிள் ஓடை 4ம் பாலம் இசக்கியம்மன் கோவில் சிமெண்ட் சாலை பகுதிகளில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட இளம் சிறார்களின் குற்றச்சம்பவம் அங்குள்ள சி.சி. டிவி காட்சிகளின் வழியாக அம்பலமாகி இருப்பதால், இளம் சிறார்களின் திருட்டு சம்பவத்தால் இப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாகி வருகிறது.
அதாவது, பக்கிள் ஓடை 4ம் பாலம் இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ள சாலையின் கரையேற இல்லங்களில் வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த "பைக், ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்களில் அத்துமீறி உடைத்தெறிந்து, வாகனத்தில் இருக்கின்றவைகளை அள்ளி எடுத்துச் செல்கின்றனர். திருடப்பட்டதில் தேவைப்படாதவைகளை பக்கிள் ஓடைக்குள் கண்மூடித்தனமாக எரிந்து விட்டுச் செல்கின்றனர். மேலும் வாகனங்களில் திருட படக்கூடியது பணம், மொபைல், டூல்ஸ் செட், பேட்டரி, பெட்ரோல், வன்டி சாவி, கார் செட் மற்றும் ஸ்பீக்கர் உள்ப்பட அவர்களிடம் கிடைப்பதை அள்ளி எடுத்துச் செல்கின்றனர். தட்டிக் கேட்பவர்களை ஆயுதம் கொண்டு தாக்கவும் இந்த கும்பல் முயற்சிக்கின்றனர்.
ஆகவே பக்கிள் ஓடை புறவழிச்சாலையில் காவல்துறையின் ரோந்து பணிகளை தீவிரபடுத்த வேண்டும். சந்தேகப்படும்படி சுற்றி திரியும் இளம் சிறார்களை பார்க்கும் இடத்தில் விசாரிக்க வேண்டும், குற்றம் செய்து இருந்தால் தண்டிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக ஒலிக்கிறது. மேலும் பக்கிள் ஓடை கரையோரம் மது அருந்துவது, மது விற்பது மற்றும் கஞ்சா விற்பது, கஞ்சா அடிப்பது உள்ப்பட பல சமூகவிரோத செயல்களும் நித்தம் இச்சாலையில் அரங்கேறி வருகிறது. காவல்துறை இவைகளை கவணத்தில் கொண்டு நடவடக்கை எடுக்க வேண்டியது அவசியமாகி வருகிறது. காவல்துறை கவணத்தில் கொள்ளாத பட்சத்தில் இங்கு தினமும் நடந்தேறும் அவலங்களுக்கும் அபாயங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை பொதுமக்கள் சார்பாக காவல்துறையின் கவனத்திற்கு தெரிவிக்கின்றனர்.