முதலமைச்சர் ஆகிறார் விஜய்!!- தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ, சிபிஐஎம் ஆதரவு - விசிக நாளை ஆதரவு என தகவல் "அரசியல் சட்டப்படி - "புதிய ஆட்சி அமைய ஆளுனர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ஆளுநருக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்.!
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் நிலவி வந்த இழுபறிக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது ஆதரவை அறிவித்துள்ளன.
கவர்னர் ஆட்சி என்ற பெயரில் பாஜக கொல்லைப் புற வழியாக ஆட்சியமைப்பதை தடுப்பதற்க்காக வெளியில் இருந்து ஆதரவு அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம் என சிபிஐ, சிபிஎம் அறிவிப்பு
சட்டமன்றத் தேர்தலில் தலா 2 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெக அரசுக்கு வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று வழங்கியது. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விரைவில் கடிதத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தது. இருப்பினும், 234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் 118 இடங்கள் இருந்தால்தான் பெரும்பான்மை நிரூபிக்க முடியும் என்ற சூழலில், ஆளுநர் ஆர்.என். ரவி இதுவரை விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இந்த நெருக்கடியைத் தீர்க்க, தவெக நிர்வாகிகள் இடதுசாரி மற்றும் விசிக நிர்வாகிகளை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆளுநரின் விளக்கம்: "போதிய பெரும்பான்மை பலம் (Magic Number) இல்லாத காரணத்தினாலேயே ஆட்சி அமைக்க இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை" என்று ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளதால், தவெக-வின் பலம் அதிகரித்துள்ளது.
விசிக-வின் நிலைப்பாடு: கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்த முடிவைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (விசிக) தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் விஜய்யின் தலைமையிலான புதிய அரசு அமையத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. இந்த அதிரடி மாற்றங்களால் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
