தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம்.!
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவை தொடர்பாக தொடர்ச்சியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் எம்.சாய்குமார், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. க. மணிவாசன், காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், முதலமைச்சரின் செயலாளர் ஜி.லட்சுமி பிரியா, காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
