தூத்துக்குடி TVK எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து!

 

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, புதிய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீநாத்தை, காங்கிரஸ் கட்சியினர் நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல், அவரை நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த வாழ்த்து நிகழ்வின் போது, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜான் பிரிட்டோ மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டு புதிய சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி