Posts

16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Image
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை சு...

பழனியில் மரம் விழுந்து வாலிபர் பலியான சம்பவம்: நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Image
பழனியில் நேற்று மரம் விழுந்து இறந்துபோன ஹரிஹரசுதன் அவர்களின், உறவினர்கள் இறந்தவரின் உடலை வாங்க மறுத்துவிட்டனர். மேலும் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் .      மரம் விழுந்து இறந்த குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டும் மற்றும் பலமுறை மனு கொடுத்தும் மரத்தை அகற்றாத காரணத்தினால் நகராட்சி ஆணையரை கண்டித்து சாலை மறியல் நடைபெறுகிறது.

கர்நாடக புகைப்படக்காரர் கேமராவில் சிக்கிய கபினிக் காட்டுக் கருஞ்சிறுத்தை

Image
காடுகளில் வசிக்கும் கானக உயிரினங்களை காண்பது அரிதான விஷயம். காட்டுப்புலி, சிறுத்தை போன்ற அரிதான உயிரினங்களை காண்பதற்காக வன ஆர்வலர்களும், வனவியல் புகைப்படக்காரர்களும் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் என கணக்கில்லாமல் காத்திருப்பது இன்றளவும் நடந்து வரும் விஷயம்.  அப்படி காத்திருந்தாலும், காட்டுப்புலி, சிறுத்தை என காண்பதையும் விட அரிதான விஷயம் கருஞ்சிறுத்தை ஒன்றை நேருக்கு நேர் காண்பது... இப்படி ஒரு அரிதான கருஞ்சிறுத்தையை, கர்நாடக மாநிலத்தின் கபினி வனப்பகுதியில்,  நேருக்கு நேர் நின்று படமெடுத்திருக்கிறார் கர்நாடக வனவியல் புகைப்படக்காரரான பிரசன்ன கவுடா.. பச்சைக்காட்டின் பின்னணியில், கருந்தோல் மின்ன, பார்வையை நெருப்பாக்கி, பாய்வதற்காக பதுங்கி நடந்து வருகிறது இந்த கருஞ்சிறுத்தை.. கருஞ்சிறுத்தையின் தீர்க்கமான பார்வையை  நீங்களும் பாருங்களேன்..  

திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற அண்ணன் தம்பி மூழ்கி பலி

Image
திருப்பூர் பெரிய கடை வீதியை சேர்ந்தவர் பஷீர். இவர் திருப்பூரில் பிரிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன்கள் சபீர் (வயது 11), சபீர் (7) இருவரும் நேற்று மாலை முதல் காணவில்லை. இதுகுறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பஷீர் புகார் செய்து உள்ளார்.இந்நிலையில் இன்று காலை திருப்பூர் மின் மயானம் அருகில் உள்ள நொய்யல் தடுப்பணையில் சிறுவர்கள் இருவரும் பிணமாக மிதந்து உள்ளனர்.     இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் இருவரும் நொய்யல் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற போது மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை 

Image
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஆண்கள் கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச் சுவர் அமைத்தல் பணியானது நபார்டு திட்டத்தின் கீழ் மதிப்பீடு ரூபாய் 147.65 லட்சம் மதிப்பீட்டில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் எம்எல்ஏ அவர்களால் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந் நிகழ்வில் முன்னாள் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன்,ஜான் பகுதி கழக செயலாளர் கருணாகரன், வேலம்பாளையம் கூட்டுறவு சொசைட்டி தலைவர் வி கே பி மணி, பரணி பெட்ரோல் பங்க் நடராஜ், முன்னாள் கவுன்சிலர் திலகர் நகர் சுப்பு மற்றும் பள்ளி தலைமையாசிரியை ஆசிரியப் பெருமக்கள் ஆகியோர் சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.  

கபினி வனப்பகுதியில் கம்பீர நடை போடும் புலி

Image
  Male Tiger, Subadult cub from Kabini, Karnataka. NIKON PC:NARENDRA SINGH

இந்திரசுந்தரம் தொண்டு நிறுவவனம் சார்பில் 50 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம் துவக்கம் 

Image
திருப்பூரில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்திரசுந்தரம் தொண்டு நிறுவவனம் சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் சுமார் 50 பெண்குழந்தைகளுக்கு செல்வமகள் சிறுசேமிப்பு திட்டத்திற்கு அஞ்சலகத்தில் கணக்கு துவங்கி கொடுக்கப்பட்டது.  இது பற்றி இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் இந்திராசுந்தரம் பேசுகையில்:- மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்காக்க கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (sukanya samruddhi yojana). இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும். மாதம் சுமார் ரூ 500 வீதம் 15 வருடங்களுக்கு 90,000 செலுத்தினால் முதிர்வு தொகையாக 1,83,488 கிடைக்கும். இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதம் 250 முதல் அதிகபட்சமாக மாதம் 12,500 வரை செலுத்தலாம். மதம் 12,500 செலுத்தும்போது முதிர்வு தொகையாக 68,37,216 கிடைக்கும். சாமானியரும் இத்திட்டத்தில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு க...