Posts

சத்தியமங்கலத்தில்.மத நல்லிணக்கம் பேணும் குடியரசு தின விழா- மும்மதத்தினர் இணைந்து கொண்டாடினர்.

Image
 மத நல்லிணக் கத்தை பேணும் வகை யில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கல த்தில், பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில், சத்யா தியேட்டர் ரோடு, முஜா ஹிதீன் திடலில், குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்  சமய நல்லுறவு இயக்கத்தின் மாவட்ட தலைவர் ஆசிப், துணைத் தலைவர் சேவியர் ஆகியோர் தலை மை தாங்கினர். பெரிய  பள்ளி  வாசல் இமாம் ஷபிக் ஆல ம் முன்னிலை வகித்தார்.தண்டு மாரியம்மன் கோவில், அறங்காவலர் கோகுல் தேசியக்கொடியை ஏற்றி, வைத்தார்.விழாவில்,பள்ளி மாணவி கள் கலந்து கொண்டு தேச ஒற்றுமை குறித்த பாடல்களை பாடினர். முடி வில்  அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா

Image
*கிட்டப்பா நகராட்சி மேல்நிலை பள்ளியில் குடியரசு தின விழா! முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தலைமையில் நகர் மன்ற தலைவர் குண்டாமணி என்கின்ற செல்வராஜ் தேசிய கொடியை ஏற்றினார்!!* மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்  ஆசிரியர் கழகத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியினை நகர மன்ற தலைவர் குண்டாமணி (எ) செல்வராஜ்  ஏற்றி வைத்தார்.விழாவில்  பள்ளியில் 100% மதிப்பெண் பெற பெரிதும் பாடுபட்ட ஆசிரியர்கள் ஸ்ரீதர்,ஹெலன்பிரித்தாபரிமளா,செல்லத்துரை, பத்மாசினி ஆகியோர்  சிறப்பிக்கப்பட்டார்கள். மாணவி நிவேதாவின் சிறப்பு கலை பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் மகாதேவன், மற்றும் நகர் மன்ற  இந்நாள் முன்னாள் உறுப்பினர்கள், மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள்  பங்கேற்றார்கள்.

கோவை வெள்ளலூர் பகுதியில் மாலை நேர இலவச பாடசாலையை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் துவக்கி வைத்தார்

Image
கோவை வெள்ளலூர் பகுதியில் மாணவ,மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக துவங்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர்  மாலை நேர இலவச பாடசாலையை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் துவக்கி வைத்தார்.. கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள வள்ளலார் காலனியில் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளின் கல்வியை  ஊக்குவிக்கும் விதமாக டாக்டர் அம்பேத்கர் மாலை நேர பாட சாலை துவங்கப்பட்டது..ராவ் சாகிப் எல்சி குருசாமி கல்வி மையம்,மற்றும் நீலம் பண்பாட்டு மையம் ஆகிய அமைப்புகள் சார்பாக துவங்கப்பட்ட இதற்கான துவக்க விழா,வழக்கறிஞர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.இதில்,வெள்ளலூர் 6 வது வார்டு கவுன்சிலர் பெருமாள்,எல்சி  குருசாமி கல்வி மையத்தின் சந்துரு,மற்றும் துணை வட்டாட்சியர் கருணாநிதி,அருந்தமிழ் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் பால்ராஜ்,ஆசிரியர் சக்திவேல்,ஆகியோர் முன்னிலை வகித்து கல்வியின் முக்கியத்துவம் அதில் டாக்டர் அம்பேத்கரின் செயல்பாடு அவரின் தியாகங்கள் குறித்து பேசினர்.. .விழாவில் சிறப்பு விருந்தினராக,பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவரும் சமூக சேவகரும் ஆன முகம...

கோவை கெம்பட்டி காலனி 80 வது வார்டு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நாட்டின் 75வது குடியரசு தின விழா

Image
கோவை மாநகராட்சி 80 வார்டுக்குட்பட்ட கெம்பட்டிகாலனி  மாநகராட்சி  மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற நாட்டின்  75வது குடியரசு தின விழா வில் கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் கலந்து கொண்டு தேசிய  கொடியேற்றி வைத்து  பள்ளி மாணவ மாணவிகளிடையே  சிறப்புரையாற்றினார்.பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது .மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு  போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற  மாண மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இவ்விழாவில்  தலைமை ஆசிரியர் ஸ்ரீ கலா ,பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மற்றும்  பகுதி துனைச்செயலாளர் முருகேஷன்  வார்டு செயலாளர் தங்கவேல் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கோவையில் நிறுவன தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் தென்னிந்திய உச்சி மாநாடு நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது*

Image
*கோவையில் நிறுவன தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் தென்னிந்திய உச்சி மாநாடு நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது*  கோயம்புத்தூரில் நடைபெறும் பெரிய வணிக உச்சி மாநாட்டின் மூலம் தொழில்முனைவோரை உயர்த்துவதை  ரிச்னஸ் கிரியேட்டர்ஸ்  நோக்கமாகக் கொண்டுள்ளது:  கோவையில் ரிச்னஸ் கிரியேட்டர்ஸ் சார்பில்  20வது வணிக உச்சி மாநாடு நடைபெற உள்ளது.  நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது  இது குறித்து நிறுவனத்தின் நிறுவனர் டி.பி.ஷோகத் கூறுகையில் , இந்த உச்சி மாநாடு  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்   மற்றும் SME  துறையைச் சேர்ந்த தொழில் முனைவோர், வணிகர்கள்  பங்கேற்க உள்ளனர். தலைமை, சேவை, அமைப்பு கலாச்சாரம் மற்றும் விற்பனை ஆகிய 4 முக்கிய வணிகத் துறைகளில் குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வணிகங்களை வலுப்படுத்துவதே இந்த உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்வதன் நோக்கம்  ஆகும். தற்போதுள்ள SME வணிகங்கள் சமீபத்தில் தங்கள் செயல்பாடுகளை தொடங்கி, புதிய உயரங்களை அளவிட விரும்புகின்றன, அவர்கள் எவ...

குடியரசு தினத்தை முன்னிட்டு சிறந்த சேவைக்காக கோவை மாவட்ட ஆட்சியர் கையால் விருது

Image
கோவையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களில் சிறந்த சேவை செய்ததற்காக ஜோட்டிகுரியன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது பணி மற்றும் சமூக சேவையில் சிறந்து விளங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார் கோயம்புத்தூர் நெடுஞ்சாலை பிரிவில் கோட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ஜோட்டிகுரியன் அவர் 1996 இல் நெடுஞ்சாலைத் துறையில் சேர்ந்தார் தர்மபுரி கோபிசெட்டிபாளையம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் பணிபுரிந்தார். குருவாயூர் அருகேயுள்ள திருச்சூர் சிட்டாட்டுக்கரையைச் சேர்ந்தவர்  இப்போது சூலூர் காங்கயம்பாளையதில் குடியிருந்து வருகிறார் இவரது மனைவி ஜீனா இந்திய விமானப்படையில், சூலூரில் சிவில் கெஜட்டட் அதிகாரியாக பணிபுரிகிறார் இவருக்கு இரண்டு குழந்தைகள் ஜெரோம் மற்றும் ஜாயல் என்பது குறிப்பிடத்தக்கது

*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.மகுடேஸ்வரன் தலமையில் நடைபெற்றது *

Image
 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.மகுடேஸ்வரன் தலமையில் நடைபெற்றது  இக்கூட்டத்தில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு கெட்டிச்செவியூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டாம் எனவும் கிராம ஊராட்சியாகவே இருக்க வேண்டும் எனவும் 68 மனுக்கள் மூலம் 5759 பேர் கையொப்பம் இட்டு மனுக்கள் வழங்கியுள்ளார்கள் மேலும்இந்த கிராம சபையில் பேரூராட்சி வேண்டாம் என்று பொதுமக்கள் அளித்த விண்ணப்பம் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சி தலைவருக்கு அனுப்பபடும் என்று ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துக் கொண்டார் இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்