மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா

*கிட்டப்பா நகராட்சி மேல்நிலை பள்ளியில் குடியரசு தின விழா! முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தலைமையில் நகர் மன்ற தலைவர் குண்டாமணி என்கின்ற செல்வராஜ் தேசிய கொடியை ஏற்றினார்!!* மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்  ஆசிரியர் கழகத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியினை நகர மன்ற தலைவர் குண்டாமணி (எ) செல்வராஜ்  ஏற்றி வைத்தார்.விழாவில்  பள்ளியில் 100% மதிப்பெண் பெற பெரிதும் பாடுபட்ட ஆசிரியர்கள் ஸ்ரீதர்,ஹெலன்பிரித்தாபரிமளா,செல்லத்துரை, பத்மாசினி ஆகியோர்  சிறப்பிக்கப்பட்டார்கள். மாணவி நிவேதாவின் சிறப்பு கலை பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் மகாதேவன், மற்றும் நகர் மன்ற  இந்நாள் முன்னாள் உறுப்பினர்கள், மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள்  பங்கேற்றார்கள்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி