Posts

3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த  சேவூர் வாலீஸ்வரர் கோவிலில்  கும்பாபிஷேக விழா கோலாகலம் 

Image
 திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த  சேவூர் வாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் 10000 - க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்புத் தலமாகவும், நடுச்சிதம்பரம் என்றும் அழைக்கப்படும் சேவூர் அறம்வளர்த்த நாயகி உடனமர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் சுமார் 3000 ஆண்டுகள் பழைமையானது.இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம்  இன்று நடைபெற்றது.இதில் ராஜகோபுரம், வாலீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி கல்யாணசுப்பிரமணியர், சிவகாமி அம்பாள் உடனமர்  நடராஜப் பெருமாள் கனக சபை, பரிவார தெய்வங்கள் உள்ளிட்ட விமான கலசங்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆன்றோர்கள் மக்கள் சான்றோர்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இக்கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் கடந்த 2 - ந்தேதி காலை தொடங்கியது.  இதையடுத்து, நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகளும் மூன்று கால பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது.  இதையடுத்து, யாகசாலை மற்றும் கோயில் ...

சூலூர் காவல் நிலையத்தில் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

Image
சூலூர் காவல் நிலையத்தில் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமை தாங்கினார் இந்து இயக்கங்களான தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு இந்து அமைப்பை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஆலோசனை கூட்டத்தில் சென்றாண்டு போலவே இந்த ஆண்டும் விநாயகர் சதுத்தி விழா அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது மேலும் சூலூர் சின்ன குளத்தில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு சூலூர் காவல் ஆய்வாளிடம் அனைத்து இந்து அமைப்பினர் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது இதை பரிசீலனை செய்து முடிவு சொல்வதாக தெரிவித்துள்ளார் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிசத் மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார்,மாநகர் மாவட்ட இணை செயலாளர் கணேஷ், மாநகர் மாவட்ட இணை செயலாளர் நாகராஜ், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மாணிக்கம் உட்பட பல்வேறு இந்து அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சூலூர் சி.எஸ்.ஐ ஆலயத்தின் முன்னாள் வாலிபர்கள் குழு சார்பில் காவல் ஆய்வாளருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து

Image
சூலூர் காவல் ஆய்வாளர் மாதையனுக்கு கொலை மற்றும் குற்ற வழக்குகளில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்தமைக்கு முதல்வர் பதக்கம் மற்றும் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் இதை பாராட்டும் விதமாக சூலூர் சி.எஸ்.ஐ ஆலயத்தின் முன்னாள் வாலிபர்கள் குழு சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர் இதில் சூலூர் ஒன்றிய திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் சந்திரசேகரன்,ஜெப்ரி, பென்யமின், ராமசாமி,   முனைவர்.ராஜீவ்சந்தர், நித்தியானந்தன், அருண் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்

பவானிசாகர் அருகே, தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, அ.பண்ணாரி எம்.எல்.ஏ. நிதி உதவி.

Image
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பவானிசாகர் அருகேயுள்ள ராஜன் நகரில்,  பவானிசாகர் - பண்ணாரி சாலையில், சிற்றுண்டி மற்றும் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தனர் முத்துசாமிதம்பதியினர்.இவர்களது கடைஅருகே முடித்திருத்தும் கடையை ரங்கசாமி என்பவர் நடத்தி வந்தார். மூன்று கடைகளும் மேற்கூரை தென்னை ஓலையால் மேயப்பட்டு, தகர சீட் போடப்பட்டிருந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு, முத்துசாமி கடையின் பின்புறம், தீப்பற்றி எரிவதை கண்ட சிலர், கடையின் முன்புறம் இருந்த முத்துச்சாமிக்கு தகவல் அளித்து, தீயை அணைக்க முற்பட்டும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறை யினர் சம்பவ இடம் விரைந்து, தன்ணீர் பீய்ச்சி அடித்து, தீயை கட்டுப் படுத்தினர். இதற்குள் மூன்று கடை களும், தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது. விபத்து குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர் சம்பவம் குறித்து அறிந்த, பவானி சாகர் எம்.எல்.ஏ அ .பண்ணாரி மற்றும் அதிமுக சத்தி வடக்கு ஒன்றிய செய லாளர் சி.என். மாரப்பன் ஆகியோர், தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, நேரில்சந்தித்துஆறுதல்கூறியும்,நிதிஉத...

சென்னை ஆவடியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் பங்கேற்பு

Image
 சென்னை ஆவடியில் காவல் துறை துணை ஆணையர் தலைமையில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் ஆவடி ஸ்டாலின் கலந்து கொண்டு வரும் விநாயகர் சதுர்த்தி விழாவில் சென்றாண்டு போல் இந்த ஆண்டும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது என்றும் அனைவரும் ஒன்றிணைந்து விநாயகர் சதுர்த்தி விழா பிரதிஷ்டை முதல் விசர்ஜன ஊர்வலம் வரை அனைவரும் முழுமையாக ஒத்துழைப்போம் என்று  சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார் 

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக மாநில செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் தலைமையில் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் நடைபெற்றது

Image
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக மாநிலச் செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் தலைமையில் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு வந்திருந்த அனைவரையும் பொதுச்செயலாளர் பேராசிரியர் எ.மு. ராஜன் வரவேற்றார். கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்ராமன் நோக்க உரையாற்றினார். கழகத்தின் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் தலைமையுரை ஆற்றினார்.  கூட்டத்தின் தொடக்கத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வலியுறுத்தி உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு  நடைபெற்ற போராட்டத்தைப் பற்றிய நிறை குறைகள் பதிவு செய்யப்பட்டன. அடுத்த கட்டமாக புதுவை மாவட்டத்தில் உள்ள ஐந்து பஞ்சாயத்துக்கள் மற்றும் புதுச்சேரி நகராட்சி உள்ளிட்ட ஆறு இடங்களிலும் காரைக்காலிலும் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.  இத்தொடர் போராட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக இளங்கோவன், விமலா பெரியாண்டி, பரந்தாமன், ரஞ்சித் குமார் , சிவகுமாரன், தினகரன், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர் போராட்டங்களுக்கான தேதிகளும் முடிவு செய்யப்பட்டன.  கூட்...

சத்தியமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி.

Image
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொமாரபாளையம் ஊராட்சி பகுதி யில் அமைந்துள்ள,அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி + 1 மாணவ, மாணவியர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.சி.பி. இளங்கோ தலைமையில், கொமார பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் மற்றும் ,பள்ளி தலைமையாசிரியை ராதிகா மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச் செல்வி ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரமேஷ்,ஊராட்சி மன்ற உறுப்பினர் எம். வடிவேலு, கொமாரபாளையம் ஊராட்சி பகுதி திமுகநிர்வாகிகள் சுரேஷ்,மாணிக்கம் மற்றும் ஊராட்சி வளர்ச்சிக் குழு உறுப்பினர் ராசு (எ) முனுசாமி, பள்ளி மாணவ,மாணவியரின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 78 மாணவ, மாணவியர்க்கு இன்று விலையில்லா  மிதிவண்டி வழங்கப் பட்டது.