சத்தியமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி.


 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொமாரபாளையம் ஊராட்சி பகுதி யில் அமைந்துள்ள,அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி + 1 மாணவ, மாணவியர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.சி.பி. இளங்கோ தலைமையில், கொமார பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் மற்றும் ,பள்ளி தலைமையாசிரியை ராதிகா மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச் செல்வி ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரமேஷ்,ஊராட்சி மன்ற உறுப்பினர் எம். வடிவேலு, கொமாரபாளையம் ஊராட்சி பகுதி திமுகநிர்வாகிகள் சுரேஷ்,மாணிக்கம் மற்றும் ஊராட்சி வளர்ச்சிக் குழு உறுப்பினர் ராசு (எ) முனுசாமி, பள்ளி மாணவ,மாணவியரின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 78 மாணவ, மாணவியர்க்கு இன்று விலையில்லா  மிதிவண்டி வழங்கப் பட்டது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி