அமைச்சர் உத்தரவை மதிக்காத ஓட்டுனர் - நடத்துனர் : மதுரை - தூத்துக்குடி வழித்தடத்தில் அனுமதிக்கப்படாத நெடுஞ்சாலை ஹோட்டலில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்தால் பயணிகள் அவதி.!

அரசு பேருந்துகளை அரசால் ஒதுக்கப்பட்ட நெடுஞ்சாலை ஹோட்டல்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்பதை மீறி அலட்சியமாக, விருப்பமான ஹோட்டல்களில் பேருந்துகளை நிறுத்தும் ஓட்டுநர்கள்- நடத்துநர்களால் உணவகங்கள் மோசமானதாக இருப்பதாகவும், அந்த ஓட்டல்களில் விலை மிகவும் அதிகமாகவும் உள்ளதாகவும் பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்தன. இப்படி பல்வேறு பிரச்சினைகள் உருவானதைத் தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு இதுதொடர்பாக, விழுப்புரம் விக்ரவாண்டி பகுதியிலுள்ள குறிப்பிட்ட ஐந்து உணவகங்களில் மட்டும் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்த உணவகங்கள் போல பல உணவகங்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து, அரசுப் பேருந்துகள், குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறையும் உத்தரவிட்டிருந்தது. அந்த லிஸ்டில் மதுரை தூத்துக்குடி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் மேலக்கரந்தை நெல்லை ஆரியாஸ்...தூத்துக்குடி மதுரை வழித்தடத்தில் ரமேஷ் ஹோட்டல் மேலக்கரந்தை ஆகிய இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 18 அதிக...