Posts

அமைச்சர் உத்தரவை மதிக்காத ஓட்டுனர் - நடத்துனர் : மதுரை - தூத்துக்குடி வழித்தடத்தில் அனுமதிக்கப்படாத நெடுஞ்சாலை ஹோட்டலில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்தால் பயணிகள் அவதி.!

Image
  அரசு பேருந்துகளை அரசால் ஒதுக்கப்பட்ட நெடுஞ்சாலை ஹோட்டல்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்பதை மீறி அலட்சியமாக, விருப்பமான ஹோட்டல்களில் பேருந்துகளை நிறுத்தும் ஓட்டுநர்கள்- நடத்துநர்களால் உணவகங்கள் மோசமானதாக இருப்பதாகவும், அந்த ஓட்டல்களில் விலை மிகவும் அதிகமாகவும் உள்ளதாகவும் பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்தன. இப்படி பல்வேறு பிரச்சினைகள் உருவானதைத் தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு இதுதொடர்பாக, விழுப்புரம் விக்ரவாண்டி பகுதியிலுள்ள குறிப்பிட்ட ஐந்து உணவகங்களில் மட்டும் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்த உணவகங்கள் போல பல உணவகங்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து, அரசுப் பேருந்துகள், குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறையும் உத்தரவிட்டிருந்தது. அந்த லிஸ்டில் மதுரை தூத்துக்குடி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் மேலக்கரந்தை நெல்லை ஆரியாஸ்...தூத்துக்குடி மதுரை வழித்தடத்தில் ரமேஷ் ஹோட்டல் மேலக்கரந்தை ஆகிய இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 18 அதிக...

கோவில்பட்டி அருகே அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல் - ஒருவர் காயம்.!

Image
  தூத்துக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று கோவில்பட்டி நோக்கி நேற்று மாலை வந்து கொண்டிருக்கிறது. பேருந்தை  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நடுவபட்டியை சேர்ந்த போத்திராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்து கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியில் வந்த திடீரென அரசு பேருந்து நிலைகுலைந்து ஒரு சுற்று சுற்றி, ராஜபாளையத்திலிருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.  இதில் கண்டெய்னர் லாரியின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது மட்டுமின்றி கண்டெய்னர் லாரி டிரைவர் மலையடிப்பட்டியை சேர்ந்த சுந்தரலிங்கம்  காயமடைந்தார். அரசு பேருந்து பின்பகுதி சேதமடைந்து.  அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை.  இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று காயமடைந்த கண்டெய்னர் லாரி டிரைவர் சுந்தரலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பணிக்காக சென்ற 3 மாலுமிகள் மூச்சு திணறி பலி.!!

Image
  தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் டக்போர்ட்  இழுத்து செல்லும் பார்ஜ் என்னும் படகின் கீழ் தளத்தில் பணிக்காக ராஜஸ்தானை சேர்ந்த சந்திப் குமார் (22), திருநெல்வேலி மாவட்டம் உவரியைச் சேர்ந்த ரோன் ஜார்ஜ் (25), தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியைச் சேர்ந்த ஜெனிஸ்டன் தாமஸ் (35) ஆகியோர் இறங்கியுள்ளனர். அவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவர்கள் அங்கு மாட்டிக் கொண்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அலுவலர் கணேசன் தலைமையில் நிலைய உதவி மாவட்ட அலுவலர் மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி அவர்களை மீட்டு துறைமுக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். போதிய ஆக்ஸிஜன் கிடைக்காததால் அவர்கள்  இறந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத...

கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்.!

Image
  கரூர் முப்பெரும் விழாவில் திமுக துணை பொதுச் செயலர் கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் கட்சிப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 16 நிர்வாகிகளுக்கு நற்சான்று வழங்கினார். 16 நிர்வாகிகளுக்கு நற்சான்றுகளுடன் பணமுடிப்பு வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார். இது குறித்து கனிமொழி எம்.பி. கூறுகையில்:- "முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் உள்ளிட்ட பல கழக முன்னோடிகளும், கொள்கைப் பற்றாளர்களும் பெற்ற நம் கழகத்தின் பெரியார் விருதினை, இன்று நம் கழக முப்பெரும் விழாவில் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் அதிகம் கொள்கை வழி பணியாற்றிட ஊக்கமும் உற்சாகமும் பெறுகிறேன்" என கூறியுள்ளார்

தூத்துக்குடி : பட்டாக்களை ரத்து செய்ய மாநகராட்சி திடீர் உத்தரவு - பொதுமக்கள் அதிர்ச்சி.!!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டுக்கு உட்பட்ட லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை ரத்து செய்து அதைச் சுற்றியுள்ள வீடுகளை அப்புறப்படுத்த ராஜாராம் என்பவர் தொடர்ந்த வழக்கில், குடியிருப்புகளுக்கு வழங்கியுள்ள பட்டாக்களை ரத்து செய்ய, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறித்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். மாநகராட்சியின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், வட்டாட்சியருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி.!

Image
  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் நாள் சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு இன்று (17.09.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் உட்பட காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் மாவட்ட காவல் அமைப்பு பணி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஆகியோரால் கீழ்கண்டவாறு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியையும் - ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவு  பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடி...

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் கொலை வெறி தாக்குதல்: ஒருவர் பலி - 2 பயணிகள் படுகாயம்!

Image
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பயணிகள் படுகாயம் அடைந்தனர்.  திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சிமணியாச்சியை சேர்ந்த கந்தசாமி மகன் பாண்டிதுரை (29) என்பவர் 4வது நடைமேடையில் உணவு உண்டுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநில வாலிபர் ஒருவர் இரும்புக்கம்பியால் பாண்டிதுரையை தாக்கினார். தொடர்ந்து, அதே நடைமேடையில் நின்றிருந்த மேலும் 2 பேரையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றார்.காயமடைந்த மூவரையும் திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீசார் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  தாக்குதலில் காயமடைந்த கோவையைச் சேர்ந்த தங்கப்பன், தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டிதுரை, கேரளாவைச் சேர்ந்த பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தங்கப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் தச்சநல்லூா் ரயில்வே ப...