Posts

கரூர்: விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு.

Image
கரூர்: விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு. காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம். -பிரதமர் மோடி அறிவிப்பு.

த.வெ.க. மாவட்ட செயலாளர் தலைமறைவு.! –புஸ்ஸி ஆனந்த் எங்கிருக்கிறார்? விஜய் கைது எப்போது?- உச்சகட்ட கோபத்தில் தமிழகம்.!!

Image
  பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமறைவு எனத் தகவல் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எங்கிருக்கிறார்? என்றும் எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில் விஜய்யின் பொறுப்பற்ற செயலால் 39 பேர் பலியான சோக சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட செயலாளர்கள், பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கையை தொடங்கி இருக்கும் தமிழ்நாடு அரசு பலிகளுக்கு முழு பொறுப்பான தவெக தலைவர் விஜய்யை கைது செய்து நடந்து முடிந்த துயர சம்பவத்திற்க்கு பொறுப்பாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். விஜய் கைது எப்போது என்பதுதான் தமிழக மக்களின் தற்போதைய தலையாய கேள்வியாக உள்ளது.

பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் நிவாரண உதவி - விஜய் அறிவிப்பு.!

Image
  விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 20 லட்சம் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள  அறிக்கையில்:-  "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது. என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.  நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்ப...

“பெரும் துயர சம்பவத்தில் 39 பேர் பலியாகியுள்ளனர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் - முதலமைச்சர் ஸ்டாலின்.!

Image
“பெரும் துயர சம்பவத்தில் 39 பேர் பலியாகியுள்ளனர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் - முதலமைச்சர் ஸ்டாலின் 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் துயரச் சம்பவம் நடந்திருக்கக்கூடாது..இனி நடக்கக்கூடாது கனத்த இதயத்துடன் ஆறுதல் தெரிவிக்கிறேன் சிகிச்சை பெறுபவர்கள் நலம் பெறுவார்கள் என நம்புகிறேன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

கரூர்: விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேர்களின் விவரம் வெளியீடு!

Image
  கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று இரவு தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டம் நடைபெற்றது. விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 37 பேரின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளன. அந்த விவரங்கள் பின்வருமாறு: 1. தாமரைக்கண்ணன்(வயது 25) த/பெ.முருகேசன். ஒத்தப்பட்டி காலனி, பாகநத்தம், கரூர். 2. ஹேமலதா(வயது 8) க/பெ.ஆனந்த்ஜோதி, 1/17, விஸ்வநாதபுரி, கரூர் 3. சாய்லெட்சனா(வயது 8) த/பெ.ஆனந்த்ஜோதி. 1/17, விஸ்வநாதபுரி. கரூர் 4. சாய்ஜீவா(வயது 4) த/பெ.ஆனந்த்ஜோதி, 1/17, விஸ்வநாதபுரி, கரூர் 5. சுகன்யா(வயது 33) க/பெ.தேவேந்திரன், வடிவேல்நகர் காவலர் காலனி, கரூர் 6. ஆகாஷ்(வயது 23) த/பெ.மாணிக்கம், காமராஜ்புரம், கரூர் 7. தனுஷ்குமார்(வயது 24) த/பெ.இளங்கோவன், காந்திநகர், காந்திகிராமம், கரூர் 8. வடிவழகன் (எ)வடிவேல்(வயது 54) த/பெ.முத்துசாமி 61. மேங்காட்டுத...

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது BNS 105, 110, 125, 223, TNPPDL 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.!!

Image
  தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்மல் குமார் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு. 4 பேர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு  கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் பலி  BNS 105, 110, 125, 223, TNPPDL 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு  தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீதும் வழக்குப்பதிவு

38 உயிர்கள் பலியான சோக சம்பவம்.! இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 118(1) ன் கீழ் விஜய் கைதாக வாய்ப்பு.!?

Image
  AI IMAGE "ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்  அமைக்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 குழந்தைகள், 17 பெண்கள், உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர். இது இந்தியாவில் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் பிரச்சார வாகனத்தை நோக்கி லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்ததால், தள்ளுமுள்ளுகள் ஏற்பட்டன. குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விஜய் பேசி சென்ற பிறகு கூட்டம் கலைவதற்கு முன் 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததாக தெரியவந்தது. ஆம்புலன்ஸ்கள் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மொத்தம் 45-50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தாய்-குழந்தை வார்டுகள் நிரம்பியுள்ளன. கரூர் அரசு மருத்துவமனையில் 74 படுக்கைகள் உள்ளன. அவை நிரம்பியுள்ளன. திருச்சி உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து மருத்துவ குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தமி...