38 உயிர்கள் பலியான சோக சம்பவம்.! இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 118(1) ன் கீழ் விஜய் கைதாக வாய்ப்பு.!?

 

AI IMAGE
"ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்  அமைக்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 குழந்தைகள், 17 பெண்கள், உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர். இது இந்தியாவில் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயின் பிரச்சார வாகனத்தை நோக்கி லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்ததால், தள்ளுமுள்ளுகள் ஏற்பட்டன. குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விஜய் பேசி சென்ற பிறகு கூட்டம் கலைவதற்கு முன் 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததாக தெரியவந்தது. ஆம்புலன்ஸ்கள் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மொத்தம் 45-50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தாய்-குழந்தை வார்டுகள் நிரம்பியுள்ளன. கரூர் அரசு மருத்துவமனையில் 74 படுக்கைகள் உள்ளன. அவை நிரம்பியுள்ளன. திருச்சி உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து மருத்துவ குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசியல் வரலாற்றில் கறுப்பு தினமாக அமைந்த இந்நாள் அகில இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அத்துடன் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்தோர் குடும்பத்தினரை நேரில் பார்த்து ஆறுதல் கூற  நேரில் செல்ல முயற்சி செய்யாத நடிகர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பிலிருந்தும்  கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் 38 உயிர்கள் பலியான கொடூர  சம்பவத்திற்க்கு காரணமான விஜய்யை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

அண்டை மாநிலமான ஆந்திராவில் புது திரைப்பட வெளியீட்டு சமயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர் ஒருவர் மரணமடைந்த போது அப்படத்தின் கதாநாயகனான நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது போல் சுமார் 38க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைய காரணமாக இருந்த பிரச்சார கூட்டத்தின் கதாநாயகனான நடிகர் விஜய்யும் கைது செய்யப்பட்டு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

ஹைதராபாத்தில் நடந்த 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படத்தின் முதல் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் பரிதாபமாக இறந்தது தொடர்பாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 2024 டிசம்பர் 13ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் டிசம்பர் 4 ஆம் தேதி சந்தியா தியேட்டரில் நடந்தது, அப்போது 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்காக அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.

அவர், மீது பாரதிய நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) இன் பிரிவுகள் 105 மற்றும் 118(1)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. BNS BNS இன் பிரிவு 105, 'கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை' குறித்தது. இது கொல்லும் நோக்கத்துடன் அல்லது மரணம் நிகழக்கூடும் என்று தெரிந்தும் செய்யப்படும் செயல்களால் மரணம் ஏற்பட்டால் கடுமையான குற்றமாகும். இந்த வழக்கில், ஒரு பொது நிகழ்வின் போது கூட்டத்தை முறையாக நிர்வகிக்கத் தவறுவதும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவதும் இந்தப் பிரிவின் கீழ் அலட்சியத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. இந்தப்பிரிவின் கீழ் குற்றவாளிகள் ஆயுள் தண்டனை அல்லது 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும். அபராதமும் விதிக்கப்படலாம்.116291348 இந்த விதி இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 304 ஐப் போன்றது.

ஒரு உயிர் பலியானதற்கே இண்த சட்டத்தின் மூலம்தான் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். கரூரில் 33 உயிர்கள் பலியாகி இருக்கிறது. இதற்கு விஜய் தான் பொறுப்பேற்க வேண்டும் என கூறப்பட்டு வருகிறது. ஒருவேளை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 118(1) ன் கீழ் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்படலாம் எனக்கூறப்படுகிறது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி