டிசம்பர் 06 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்!, - வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான பாசிச எதிர்ப்பு தினத்தை (டிச.06) முன்னிட்டு, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்கிற முழக்கத்துடன் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக தூத்துக்குடி தொகுதி திரேஸ்புரம், மேட்டுப்பட்டி திடலில், எஸ்டிபிஐ கட்சியின் M. ஷேக் அஷ்ரப் அலி ஃபைஜி மாவட்ட தலைவர் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி தொகுதி செயலாளர் K.M.J. ரியாஸ் வரவேற்பு உரையாற்ற, எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி தொகுதி துணைத் தலைவர் T. எடிசன் நன்றியுரையாற்றினார். எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் M. மைதீன்கனி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும், எஸ்டிபிஐ கட்சியின் மாநில மீனவர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் M. H. கெளது மைதீன், எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் S.அஜீஸ் B.Sc., BL.,, எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி தொகுதி தலைவர் A. காதர் உசேன், எஸ்டிபிஐ கட்சியின் தூ...