Posts

தூத்துக்குடியில் டிச. 27, 28-இல் மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு - ஆட்சியர் தகவல்.

Image
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடியில் கடந்த டிச. 13, 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டு, வருகிற டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள், தேர்வு நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு

Image
  தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் வருகிற 20ம் தேதி (சனிக்கிழமை) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகர் துணை மின் நிலையத்தில் வருகிற 20ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம் தெரு, 1ம்கேட், 2ம்கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டையாபுரம் ரோடு, தெப்பகுளம் தெரு, சிவன் கோவில் தெரு, வ.உ.சி ரோடு, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களாதெரு, பாலவிநாயகர் கோவில் தெரு,  டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதரநகர், சண்முகபுரம் வடக்கு, மேலசண்முகபுரம் முதல் தெரு, ஸ்டேட்பேங்க் காலனி, கந்தாசாமிபுரம், இஞ்ஞாசியார்புரம், எழில்நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம், அம்பேத்கார்நகர், குறிஞ்சிநகர், அண்ணாநகர், விவிடி மெயின் ரோடு, முனியசாமிபுரம், சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம். பக்கிள்புரம், லோகியாநகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பர நகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மா...

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.

Image
  தூத்துக்குடி பீச் ரோடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமான நாளை (டிச.19) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி பீச் ரோடு துணைமின் நிலையத்தில் நாளை (டிச.19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இனிகோ நகர், ரோச் காலனி சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு, மற்றும் அதனை சுற்றியுள்ள உப்பள பகுதிகள், லயன்ஸ் டவுண், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ் காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, ஜார்ஜ் ரோடு, பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, கணேசபுரம்,  பாத்திமா நகர், இந்திரா நகர், புல்தோட்டம், டெலிபோன்காலனி, தாமஸ் நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள்தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம் பிராப்பர் சந்தை ரோடு, காந்திநகர், மேல சண்முகபுரம் 2வது தெரு, முனியசாமிபுரம்,CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர், எம்.ஜி.ஆர் நகர் முடுக்கு காடு  ஆகிய பகுதிகளில் காலை 9 மணி மு...

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை - வேதாந்தா நிறுவனம் புதிய வழக்கு

Image
  தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய மனுக்களை பரிசீலிக்க கோரி வேதாந்தா நிறுவனம் புதிய வழக்கு தொடுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அப்புறப்படுத்த கோரிய வழக்குடன் விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய மனுக்களை தமிழ் நாடு அரசு பரிசீலிக்கவில்லை என மனு அளித்திருந்த நிலையில்,பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக முறையாக விண்ணப்பிக்கவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்

SSN பொறியியல் கல்லூரிக்கு பூட்டு - இனி நோ அட்மிஷன்; தற்போது படிக்கும் மாணவர்களின் நிலை என்ன? :நிர்வாகம் விளக்கம்.!

Image
  தமிழகத்தின் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான சென்னை எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி (SSN College of Engineering), வரும் 2026-27 கல்வியாண்டு முதல் புதிய மாணவர் சேர்க்கையை நிறுத்தப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இக்கல்லூரி படிப்படியாக மூடப்பட்டு, அதன் அருகிலேயே இயங்கி வரும் ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்துடன் (Shiv Nadar University Chennai - SNUC) இணைக்கப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE) இதற்கான அனுமதியை வழங்கியுள்ளன. 2026-27 கல்வியாண்டு முதல் எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் புதிய மாணவர்கள் யாரும் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இனி பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 'எஸ்.எஸ்.என் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங்' (SSN School of Engineering) பிரிவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.சென்னையில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் (SSN) பொறியியல் கல்லூரி, வரும் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் புதிய மாணவர் சேர்க்கையை நிறுத்தப்போவதாக அறிவித்துள...

புலம் பெயர்ந்த பறவைகளால் களைகட்டும் தூத்துக்குடி உப்பளங்கள்.!

Image
கடந்த சில வாரங்களாக நீடித்த கனமழை, தூத்துக்குடியின் புறநகர்ப் பகுதியில் உள்ள உப்புப் படுகைகளை தற்காலிக நீர்நிலைகளாக மாற்றி, நீர்ப்பறவைகள் மற்றும் புலம்பெயர்ந்த உயிரினங்களுக்கு செழிப்பான வாழ்விடத்தை உருவாக்கியுள்ளது. மழைநீர் தேங்கி நிற்பதால் சிறிய மீன்கள், பூச்சிகள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால், ஏராளமான பறவைகள் இப்பகுதிக்கு வருகின்றன. உப்பளங்களில் பெரிய குழுக்களாக நீர்ப்பறவைகள் உணவருந்தும் காட்சிகள் அரிதானவை என்று பறவையியலாளர்கள் குறிப்பிடுகின்றனர், ஆனால் இந்த ஆண்டு வானிலை நிலைமைகள் நிலப்பரப்பை சாதகமாக மாற்றியுள்ளன. தூத்துக்குடி உப்பளங்களில் பறவைகள் கூட்டமாக ஆழமற்ற நீரில் இறங்கி, நீந்தி, சுறுசுறுப்பாக உணவு தேடிச் செல்வதை இப்போது காணலாம், இது உள்ளூர்வாசிகள் மற்றும் பறவை ஆர்வலர்களுக்கு அழகான காட்சிகளை வழங்குகிறது. அவற்றின் துடிப்பான அசைவுகள் மற்றும் உணவு முறைகள் இப்பகுதியை இயற்கை ஆர்வலர்களுக்கு எதிர்பாராத ஈர்ப்பாக மாற்றியுள்ளன. பறவைகள் ஏன் இடம் பெயர்கின்றன சாதகமான வானிலை மற்றும் உணவு கிடைப்பதால் இடம்பெயர்வு ஏற்படுகிறது என்று பறவையியலாளர்கள் கூறுகின்றன...

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.!

Image
  சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.  தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 10 மற்றும் 11 வயது சிறுமிகள் இருவரை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சகாயம் மகன் கெவின் (38/25) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று (17.12.2025) குற்றவாளி  கெவின் (38) என்பவருக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 13,500/- அபராதம் விதித்தும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து தலா ரூபாய் 2 லட்சம் வீதம் மொத்தம் 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி மற்றும் குற்றவாளிக்கு தண்...