Posts

பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை - தூத்துக்குடி சுங்கச்சாவடி மேலாளர் கைது!

Image
  தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த மேலாளர் அவதேஷ் சிங் கைது செய்யப்பட்டார். வடமாநிலத்தைச் சேர்ந்த இவர், அங்குள்ள பெண்களுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரை விசாரித்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவதேஷ் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.

"தமிழக அரசின் வளா்ச்சி திட்டங்களுக்கு ஓன்றிய அரசு தடையாக உள்ளது, எடப்பாடியும் போராடுவதற்கு முன் வருவதில்லை" அமைச்சா் கீதாஜீவன் தோ்தல் பயண கலந்துரையாடலில் குற்றச்சாட்டு.!

Image
தூத்துக்குடி :தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தல் களம் 5 அணிகள் மற்றும் அணி சேராமல் பலரும் தோ்தலை சந்திக்கவுள்ள நிலையில் தனியாா் தொலைகாட்சி நிறுவனம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தோ்தல் பயணம் மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற பொதுமக்கள் கலந்து கொண்ட பிரச்சார விவாதத்தில் திமுக அதிமுக நாம் தமிழா்கட்சி கலந்து கொண்ட நிகழ்வில் அதிமுக நாதக கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும்  வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில் தூத்துக்குடி தொகுதியில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் முதலமைச்சாின் 784 கோடி மதிப்பில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சாலை கால்வாய் அங்கன்வாடி மையம் புதிய ரேஷன் கடைகள் 13 நகா்நல ஆரம்ப சுகாதார அலுவலகங்கள் பல இடங்களில் புதிய மின்மாற்றிகள் 200 க்கும் மேற்பட்டவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ெதாடா்ந்து வளா்ச்சிக்கான பணிகளை திமுக மேற்கொண்டு வருகிறது. என்று பேசினாா். தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சேகா் பேசுகையில் தூத்துக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப...

மாநகராட்சியின் 60 அடி சாலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் மரணக் குழி - மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

Image
  தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் (9வது வார்டு) 60 அடி சாலையும், கிருஷ்னராஜபுரம் மெயின் சாலையும் சந்திக்கும் நான்கு வழித்தடத்தில் வாகன போக்குவரத்து மிகுதியான பகுதியாக உள்ளது. மேலும் இந்த புதக்குழிக்கு  அருகாமையில் நர்சரி & பிரைமரி பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் இருப்பதால் போக்குவரத்து நெறுக்கடியும் இச்சாலையில்  கூடுதலாகவே இருக்கிறது. இந்நிலையில் நான்கு வழிச்சாலைகள் சங்கமிக்கும் இவ்விடத்தில் மழைநீர் வடிகால் சேனலும், பாதாள சாக்கடை கால்வாய் சேனலும் முழுமையாக உடைந்து 6 மாதத்தை கட்ந்துவிட்டது. இது இன்றைய நாளில் மரணக் குழியாகவும் மாறிவிட்டது.  எனவே இந்த சாலையை பயன்படுத்தி வரும் வாகன ஓட்டிகளும் வழி போக்கர்களும் மரணபயத்திலையே கடந்து செல்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இது பகல் நேரத்தை காட்டிலும் இரவு நேரத்தில் "பலி பீடமாகவே தான் தெரியவருகிறது".   இது சம்பந்தமாக,  மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு இத்தகவலை பொதுமக்கள் சார்பாக  கொண்டு சென்ற பின்னரும் நட...

ஆட்டோவில் ஒட்டி இருந்த அமைச்சர் கீதா ஜீவன் படம் நீக்கம் - தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!

Image
  தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தொடர்பான கொடிகள், சின்னங்கள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்களை பொது இடங்களிலும், வாகனங்களிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி தூத்துக்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வந்த பரிசோதனையின் போது அந்த வழியே வந்த ஒரு ஆட்டோவில் அரசியல் கட்சி சார்ந்த  தூத்துக்குடி அமைச்சர் கீதா ஜீவன் படம் ஒட்டப்பட்டிருந்தது.  அதை தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினர் ஆட்டோவில் ஒட்டப்பட்டு இருந்த படத்தை அகற்றினர். மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், எந்தவொரு வாகனங்களிலும் அரசியல் கட்சி சின்னங்கள் அல்லது தலைவர்களின் படங்களை பயன்படுத்தக்கூடாது ...

காதலனா? தாயா? - காவல்நிலையத்தில் நடந்த பாசப்போராட்டம்.!

Image
  குரும்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டுத் தஞ்சமடைந்த காதல் ஜோடியைப் பிரிக்க முடியாமல், பெண்ணின் தாய் கண்ணீர் விட்டு நடத்திய பாசப் போராட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே நாலுமாவடியைச் சேர்ந்த குட்டிமுத்து அர்ஜுன் (19) மற்றும் ஏரல் பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா (21) ஆகிய இருவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கீர்த்திகா, நேற்று அங்கிருந்து தப்பி வந்து குரும்பூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். தாயின் கண்ணீரை துடைக்க மறுத்த காதல்.. தகவல் அறிந்து நிலையத்திற்கு வந்த பெண்ணின் தாயார், மகளைத் தன்னுடன் வருமாறு கண்ணீர் மல்கக் கெஞ்சினார். பாசப் போராட்டம் நடத்தியும் பலனில்லாத நிலையில், கீர்த்திகா தனது காதலனுடன் செல்வதிலேயே உறுதியாக இருந்தார். கீர்த்திகா மேஜர் என்பதால், அவரது விருப்பத்தின் பேரில் போலீசார் அவரை காதலனுடன் காவல்நிலையத்தில் அனுப்பி வைத்தனர். இச்சம...

நெல்லை இட்டமொழி அருகே நள்ளிரவில் மின்சாரத்தைத் துண்டித்து, இரண்டு மின்மாற்றிகளை திருடிச் சென்ற மர்ம கும்பல்.!

Image
நெல்லை இட்டமொழி அருகே நள்ளிரவில் மின்சாரத்தைத் துண்டித்து, இரண்டு மின்மாற்றிகளை மர்ம கும்பல் துணிகரமாகத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகத் தோட்டங்களில் மின் இணைப்பைத் துண்டித்து விட்டு மின்கம்பிகளை மட்டும் மர்ம நபர்கள் திருடிச் செல்வது இங்கு  வழக்கமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இட்டமொழியில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு, இரண்டு மின்மாற்றிகளையே (Transformers) மர்மகும்பல் ஒன்று திருடிச் சென்றுள்ளது என்பது நவீன முறையிலான மொகா திருட்டாகவே பார்க்கப்படுகிறது. இட்டமொழி பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின் விநியோகம் செய்வதற்காக இலங்கையாடி குளம் மற்றும் ஒத்தவீடு வேலாயுதபுரம் காட்டுப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் மின்மாற்றிகள் நிறுவப்பட்டிருந்தன. சம்பவத்தன்று இரவு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பைத் துண்டித்துள்ளனர். பின்னர், மின்மாற்றிகளைக் கயிறு கட்டி கீழே இறக்கி, வாகனத்தில் ஏற்றித் திருடிச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில் தோட்டங்களுக்குச் சென்ற விவசாயிகள், மின் விநியோகம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த...

விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு திடீர் உடல்நலக்குறைவு.!

Image
விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த 10-ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மாயமானார். மறுநாள் காலை அங்குள்ள காட்டுப்பகுதியில் காயங்களுடன் அவர் சடலமாக மீட்கப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு அருகில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு மோட்டார் சைக்கிளைப் போலீசார் கைப்பற்றினர். அதன் பதிவு எண்ணை ஆய்வு செய்தபோது, அது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் திருடப்பட்டது எனத் தெரிந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள க...