காதலனா? தாயா? - காவல்நிலையத்தில் நடந்த பாசப்போராட்டம்.!

 

குரும்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டுத் தஞ்சமடைந்த காதல் ஜோடியைப் பிரிக்க முடியாமல், பெண்ணின் தாய் கண்ணீர் விட்டு நடத்திய பாசப் போராட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே நாலுமாவடியைச் சேர்ந்த குட்டிமுத்து அர்ஜுன் (19) மற்றும் ஏரல் பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா (21) ஆகிய இருவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கீர்த்திகா, நேற்று அங்கிருந்து தப்பி வந்து குரும்பூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

தாயின் கண்ணீரை துடைக்க மறுத்த காதல்..

தகவல் அறிந்து நிலையத்திற்கு வந்த பெண்ணின் தாயார், மகளைத் தன்னுடன் வருமாறு கண்ணீர் மல்கக் கெஞ்சினார். பாசப் போராட்டம் நடத்தியும் பலனில்லாத நிலையில், கீர்த்திகா தனது காதலனுடன் செல்வதிலேயே உறுதியாக இருந்தார். கீர்த்திகா மேஜர் என்பதால், அவரது விருப்பத்தின் பேரில் போலீசார் அவரை காதலனுடன் காவல்நிலையத்தில் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி