மாநகராட்சியின் 60 அடி சாலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் மரணக் குழி - மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

 

தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் (9வது வார்டு) 60 அடி சாலையும், கிருஷ்னராஜபுரம் மெயின் சாலையும் சந்திக்கும் நான்கு வழித்தடத்தில் வாகன போக்குவரத்து மிகுதியான பகுதியாக உள்ளது. மேலும் இந்த புதக்குழிக்கு  அருகாமையில் நர்சரி & பிரைமரி பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் இருப்பதால் போக்குவரத்து நெறுக்கடியும் இச்சாலையில்  கூடுதலாகவே இருக்கிறது. இந்நிலையில் நான்கு வழிச்சாலைகள் சங்கமிக்கும் இவ்விடத்தில் மழைநீர் வடிகால் சேனலும், பாதாள சாக்கடை கால்வாய் சேனலும் முழுமையாக உடைந்து 6 மாதத்தை கட்ந்துவிட்டது. இது இன்றைய நாளில் மரணக் குழியாகவும் மாறிவிட்டது. 

எனவே இந்த சாலையை பயன்படுத்தி வரும் வாகன ஓட்டிகளும் வழி போக்கர்களும் மரணபயத்திலையே கடந்து செல்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இது பகல் நேரத்தை காட்டிலும் இரவு நேரத்தில் "பலி பீடமாகவே தான் தெரியவருகிறது".  

இது சம்பந்தமாக,  மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு இத்தகவலை பொதுமக்கள் சார்பாக  கொண்டு சென்ற பின்னரும் நடவடிக்கை ஏதுமில்லாததாலும், அவ்வழியே கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள், மேயர் மற்றும் துணை மேயர், ஆணையாளர் உள்ப்பட மாநகராட்சி அதிகாரிகள் என அரசுத்துறை சார்ந்த பலரும் இவ்வழித்தடத்தில் சென்றும், பொதுமக்களுக்கு சாலையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை தெர்ந்து கொண்ட பின்னரும், இந்த மரணக்குழியை பராமரிக்க முன்வரவில்லை. இதனால் அந்த மரணக்குவியில் மரக்கம்பு நட்டி வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அந்த பகுதியை சார்ந்தவர்கள் அலார்ட் படுத்தியுள்ளனர். இந்த அலார்ட் மரம் விபத்தை தடுக்கிறதா? இந்த வழித்தடத்தை பயன்படுத்த தடை போடுகிறதா? என்று சொல்லும்படி மரணக்குழி அமைந்துள்ளதாக இப்பகுதி மக்களிடையே குற்றச்சாட்டு எழுகிறது. 

இதை சரி செய்து உயிர் பாதுகாப்பு தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தேர்தல் விதிமுறையை காரணம் காட்டி இப்பிரச்சனையில் இருந்து விலகிக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி