கோபிச்செட்டிபாளையம் கோசணம் ஊராட்சியில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி குட்பட்ட நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், கோசணம் ஊராட்சியில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கோசணம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்களிடம் கொடுத்தனர் ,நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது, பட்டாமாறுதல், முதியோர் உதவித்தொகை, வாரிசுசான்றிதழ். சாக்கடை வசதி ,உழவர் அட்டை ,தெருவிளக்கு வசதி போன்ற மனுக்கள் பெறப்பட்டது.முகாமிற்கு நம்பியூர் ஒன்றியகழக செயலாளர் தம்பி [எ]சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பேருராட்சி செயல் அலுவலர் எஸ்.சசிக்கலா, செல்வம்,ஊராட்சி செயலர் தனபதி, நில வருவாய் அலுவலர் அருணகிரி,கிராம நிர்வாக அலுவலர் கே.குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 


 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி