Posts

Showing posts from February, 2020

திருப்பூர் பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

Image
திருப்பூர் பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளியின் ஆண்டுவிழா பணி நிறைவுபெறும் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா மற்றும் அறிவியல் தின விழா என முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் E. பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கிராம கல்விக்குழு தலைவர் எஸ்.சிவசரண்யா முன்னிலைவகித்தார். தலைமை ஆசிரியர் எ.ஞானம்மாள் வரவேற்றப்புரையாற்றினார். இடைநிலை ஆசிரியர் சூ.வளர்மதி ராய் ஆண்டறிக்கை வாசித்தார். மேலும் எம்.ஆர்.ரத்தினசாமி, என்.நாகப்பன், முன்னாள் ஆசிரியர் ஆர்.கந்தசாமி, முன்னாள் ஆசிரியர் கனகராஜ், என்.தெய்வசிகாமணி, ஆதவன் முருகேசன், தம்பி குமாரசாமி, என்.ஜெகநாதன், ஜோதி சிவபாக்கியம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  தலைமை ஆசிரியர், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது. புரவலர் திட்டத்தின் மூலமாகவும் தனிப்பட்ட முறையிலும் பள்ளிக்கு நன்கொடை கொடுத்து உதவியவர்களுக்கும் பாராட்டி பொன்னாடை போர்த்தி சிறப்பித்தனர்.   வருடம் முழுவதும் தவறாமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ ம...

திருப்பூரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

திருப்பூர், பிப்.24: திருப்பூரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கோல்டன் நகர் பகுதியில் வசித்து வருபவர் எஸ்.கந்தசாமி என்கிற குரு(35), இவர் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை குரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் குருவை போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செயது கைது செய்தனர். இந்த வழக்கானது திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின்மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஜெயந்தி திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 7 ஆண்டு...

சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு; தமிழகத்தின் பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை! – காயல்பட்டினத்தில் சிம் கார்டுகள் பறிமுதல் !

Image
  களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியிலிருந்த சிறப்பு எஸ்.ஐ., வில்சனை துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று தமிழகத்தின் பல இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த  சிறப்பு எஸ்.ஐ  வில்சன், கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவு 9.30 மணிக்கு களியக்காவிளை அருகிலுள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மர்ம கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அப்துல் சமீம், தெளஃபீக் ஆகியோரை ஜனவரி 14-ம் தேதி தனிப்படை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.. இவ்வழக்கு தொடர்பாக இருவரையும் பல பகுதிகளில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்கள், தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்தது தெரியவந்ததால், இருவர் மீதும் என்.ஐ.ஏ அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கை என்.ஐ.ஏவுக்கு மாற்ற அனுமதிகேட்டு தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அனுமதி அளிக்கப்ப...

ஜெயலலிதா பிறந்தநாளில் பிறந்த 17  குழந்தைகளுக்கு தங்க மோதிரம், வெள்ளிக்கொலுசு: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த 17  குழந்தைகளுக்கு தங்க மோதிரம், வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.   திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடடு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், தங்க மோதிரம், கொலுசு இலவசமாக வழங்கப்படும் என திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவித்து இருந்தார். அதன் படி இன்ற்உ மாலை திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு, தங்க மோதிரம், கொலுசு ஆகியவற்றை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிறந்த அன்றே தஙகள் குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், கொலுசு...

பெரியாவுடையார் கோவில் சிவராத்திரியை முன்னிட்டு நந்தி சிலைக்கு அபிஷேக ஆராதனை

Image
பழனி தண்டாயுதபாணி சுவாமி உபகோவிலான பெரியாவுடையார் கோவில் சிவராத்திரியை முன்னிட்டு நந்தி சிலைக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திருக்கோவில் செயல் அலுவலர்  ஜெயச்சந்திர பானு ரெட்டி உதவி ஆணையர் செந்தில்குமார் கோவில் சூப்பிரண்டு முருகேசன் கோவில் அர்ச்சகர் செல்வம் சேகர் குருக்கள் உள்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர் 

பழனியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக புறநகர் பகுதிகளில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி

Image
பழனியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக பழனி நகரப்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமையாக மேற்கு மாவட்ட செயலாளர் ஆயைஜப்பார் தலைமையில் நகர செயலாளர் மோகன், இளைஞரணி மாவட்ட செயலாளர் செந்தில், தொகுதி பொறுப்பாளர் வினோத், விஜயபாஸ்கர், ரபீக் ராஜா, திருநாவுக்கரசு, அஜித்குமார், ராஜேந்திரன், ஜாகிர் உசேன், சண்முகசுந்தரம், பாபு, கௌதம்,உள்ளிட்ட கட்சி தொண்டர்கள்  கலந்து கொண்டு ஒவ்வொரு பகுதியாகச் சென்று கட்சி கொடியேற்றி கட்சி தலைவரின் புகழ்பாடும் வகையில் பல்வேறு கோஷங்களை எழுப்பி கட்சியின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றி சென்றனர்.

உதயம் பிரீமியம் காட்டன் நிறுவன ஷோரூம் திறப்பு விழா

Image
ஈரோடு ரயில் நிலையத்தில் புதிதாக உதயம் பிரீமியம் காட்டன் நிறுவன ஷோரூம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது . இந்நிகழ்ச்சியில் தென்னக ரயில்வே சேலம் கோட்ட முதன்மை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார். முதல் விற்பனையை ஆர்த்திகா காட்டன் மில்ஸ் முதன்மை மேலாளர் தண்டபாணி துவக்கி வைக்க,ஈரோடு சக்தி விநாயகர் டெக்ஸ் உரிமையாளர் சண்முகம் பெற்றுக்கொண்டார். முன்னதாக உதயம் பிரிமியம் காட்டன் நிறுவன தலைமை செயல் அதிகாரி நந்த குமார் வரவேற்றார். இந்த திறப்பு விழாவில் ரயில்வே உயரதிகாரிகள்,வியாபாரிகள் கலந்து கொண்டனர். புதிதாக திறக்கப்பட்ட ஷோரூமில் உதயம் பிரிமியம் காட்டன் நிறுவனத் தயாரிப்புகளான வேட்டிகள்,சட்டைகள், பஞ்சகச் வேட்டிகள்,பேன்ஸி பார்டர் வேட்டிகள் என ஏராளமான வகைகள்,காட்டன் மற்றும் லினன் சட்டை வகைகள், உதயம் வேட்டி வர்ணா செட்டுகள், சிறுவர்களுக்கான வேட்டி, சட்டை செட்டுகள், உள்ளாடைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பழனியில் சுவிட்சா்லாந்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சுவாமி சிலைகளின் ஊா்வலம்

Image
பழனியில் லயன்மயூர அமைப்பு சாா்பில் சுவிட்சா்லாந்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சுவாமி சிலைகளின் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.     கேரள மாநிலம் திருச்சூரை மையமாகக் கொண்டு செயல்படும் லயன் மயூர ராயல் கிங்டம் என்ற அமைப்பு கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ரெஜித்குமாா் என்பவா் தலைமையில் உலகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் முருகா், ஆஞ்சநேயா் உள்ளிட்ட சுவாமி சிலைகளை நிறுவி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு லண்டன் வேல்ஸில் உள்ள தான்தோன்றி ஆஞ்சநேயா் கோயிலில் முருகப் பெருமானின் திருவடிகளை பிரதிஷ்டை செய்ய வேண்டி முருகனின் பாதங்கள் பழனியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த ஆண்டு சுவிட்சா்லாந்தில் முருகப் பெருமான் சாந்தி யோகஆஞ்சநேயா் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.     பாலசமுத்திரத்தை அடுத்த ரெங்கசாமி கரடு அடிவாரத்தில் உள்ள ராமா் பாதத்தில் தொடங்கிய நிகழ்ச்சி ஐவா் மலை குகையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பழனி கிரிவீதியில் இரவு கிரிசுற்றி நிறைவு பெற்றது. அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு ரெஜித்குமாா் தலைமை வகித்தாா். பழனி...

மார்ச் 11ஆம் ந்தேதி பழனி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

Image
பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக மாரியம்மன் கோவில் விளங்குகிறது. பழனி கிழக்கு ரதவீதியில் இந்த கோவில் அமைந்துள்ளது.     பழமை வாய்ந்த இந்த கோவிலில் மாரியம்மன் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் கோவிலில் மாசித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா முகூர்த்தக்கால் நாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.   மேல்மாரியம்மன் கோவில் சன்னதியில் முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முகூர்த்தக்கால் நிகழ்ச்சியை காண கோவில் நுழைவு வாயிலின் வடகிழக்கு பகுதியில் மாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் கோவில் நுழைவு வாயில் முன்பு முகூர்த்தகால் நடப்பட்டது. அதையடுத்து முகூர்த்தக் காலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.     நிகழ்ச்சியில் பழனி கோயில் நிர்வாக செயல் அலுவலர் ஜெயச்சந்திரபானுரெட்டி  துணை ஆணையர் பொறுப்பு செந்தில்குமார் கண்பத் கிராண்ட் உரிமையாளரை ஹரிஹர முத்து சரவண பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் முனைவர் பாஸ்கரன் பழனி சரக காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்தன் சூப்பிரண்டு முருகேசன் ஏரா...

திசையன்விளை அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Image
திசையன்விளை அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பாள் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.     நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை பகுதியை சேர்ந்தவர் கந்தராஜ். இவர் அப்பகுதியில் சொந்தமாக வீடுகட்டி வருகிறார்கள். கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. அந்த கட்டிடத்திற்கு தினமும் தண்ணீர் விடுவது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று கந்தராஜ் மகன் ராகுல் வயது 14 . கட்டுமானத்தை தண்ணீர் விட்டு நனைப்பதற்காக சென்றுள்ளார். மோட்டார் போடுவதற்கு பக்கத்து வீட்டில் இருந்து மின் வயர் மூலம் மின்சாரம்  எடுக்கும் போது ராகுல் உடலில் மின்சாரம் தாக்கி சம்ப இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டைமண்ட் பிரிசன்ஸ் கப்பலில் 13 நாட்களாக தவிக்கும் இந்திய பயணிகள்: விமானப்படை இன்று செல்கிறது

Image
  கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பான் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் சிக்கியுள்ள 162 இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படை விமானம் செல்லவிருப்பதாக அக்கப்பலின் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் மதுரையைச் சேர்ந்த அன்பழகன் கூறி உள்ளார். ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகத்தில் டைமண்ட் பிரின்ஸஸ் என்ற சொகுசுக் கப்பல் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த 12 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் 2500 பயணிகளும் 1200 பணியாளர்களும் சிக்கியுள்ளனர். பயணிகள் மற்றும் பணியாளர்களில் 650 பேர் மட்டுமே அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை மீட்கும் பணியை ஜப்பான் அரசு மேற்கொண்டு வருகிறது. 5 தமிழர்கள் உட்பட 162 இந்தியர்கள் அக்கப்பலில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 150-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இதன் காரணமாக அக்கப்பலிலுள்ள இந்தியர்களை உடனடியாக இந்திய அரசு மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில்  அன்பழகன் நேற்று அனுப்பிய வீடியோவில், 'என்னுடன் பணியாற்றும் திருச்சியைச் சேர்ந்த முத்து என்பவரின் மனைவி இன்று காலையில் திருச்சி மாவட்ட ஆட...

அரோமா பால் நிர்வாக இயக்குநர் பொன்னுசாமி பிறந்த நாள் - ஊழியர்கள் 60 பேர் ரத்ததானம் 

Image
    திருப்பூர் அடுத்துள்ள காரணம்பேட்டை, சோமனூர் ரோட்டிலுள்ள ஸ்ரீ மகாலட்சுமி டெய்ரி பிரைவேட் லிமிடெட்  அரோமா பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர். பொன்னுச்சாமியின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது ஆண்டு சிறப்பு ரத்ததான முகாம் நிறுவன கூட்ட அரஙகில்   நடைபெற்றது, நிறுவன மேலாளர் சகாயபாபு தலைமையில், கோபால், ஹரிபிரசாத், கோபாலகிருஷ்ணன், கனகராஜ், ஜெயந்தி, ஜானகி, சேகர்,  சரவணன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரத்ததானம் செய்தனர். பின்னர் அனைத்து ஊழியர்களின் சார்பில் நிர்வாக இயக்குனருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. பள்ளி மாணவர்களிடம் தீண்டாமை கடைப்பிடிக்கும் ஆசிரியை

Image
சென்னையில்  தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களிகடம்  பிராமண தலைமையாசிரியை ஒருவர் தீண்டாமை கடைப்பிடிப்பதாக அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாற்றி வருகின்றனர்.    சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் உள்ள ஶ்ரீராம் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் மாணவர்களிடம் அப்பள்ளியின் தலைமையாசிரியை ராதா பத்மநாபன் என்பவர் ஆதிதிராவிட சமூகத்தை சார்ந்த  மாணவ மாணவிகளிடம் தீண்டாமை கடைப்பிடிப்பதாக தெரிய வருகிறது . மாணவர்கள் உடல் நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்தால் கூட அவர்கள் உண்ணும் உணவு முறையை கொச்சை படுத்தி பேசுவதாகவும் ஆதிதிராவிட மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி கட்டணம் செலுத்த வந்தால் பணத்தை ஜன்னல் வழியாக கொடுத்து விட்டு செல்லுங்கள் என்றும் மாற்று சமூகத்தை சார்ந்தவர்கள் வந்தால் அவர்களை அலுவலகத்தில் உட்கார வைத்து பேசுவதாகவும் கூறப்படுகிறது. இதானல் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். உடனடியாக தமிழக அரசு,மற்றும் பள்ளி கல்வி துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ பேட்டி

Image
எரிமலையின் ஒரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார் வைகோ பேட்டி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-  திமுக தலைமையிலான மதசார்பற்ற கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று  2 கோடியே 5 லட்சம் கையெழுத்தை ஜனாதிபதியிடம் வழங்கினோம். குடியுரிமை திருத்த சட்டத்தை எந்த காரணத்தை கொம்டு திரும்ப பெற மாட்டோம் என்று பிரதமர் மோடி பேசுகிறார். எரிமலையின் ஒரத்தில் உட்கார்ந்து மகுடி வசித்து கொண்டு இருக்கிறார். எரிமலை எப்போது வெடிக்கும் என்று தெரியாது. சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கட்டுபாட்டுடன் நடந்து கொண்டனர். சாலையில் கிடந்த பொருட்களையும் அப்புறப்படுத்திவிட்டு சென்றனர். மக்கள் மனதில் இஸ்லாமிய மக்களின் கோரிக்கை நியாயமானது என்று ஏற்பட்டு உள்ளது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறது. இந்தியாவில் ஒரு ரத்த கிளறியை உருவாக்கி இந்து, முஸ்லீம் பிரித்து கொண்டு வர இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. அதுப்போல் ஒருகாலும் நடக்காது. இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள், சீக்கியர்க...

அனகாபுத்தூரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பு

சென்னை அடுத்த அனகாபுத்தூர் 7 வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் தவிப்பு.. சென்னை அடுத்த அனகாபுத்தூர் 7 வது பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இந்நிலையில் அப்பகுதியில் இதுவரை சாலை வசதி,கால்வாய் வசதி,தண்ணீர் வசதி போன்ற அன்றாட வாழ்க்கையின் முக்கியத்துவமான எந்த ஒரு வசதியும் இது வரை அரசு செய்து தரவில்லை என்றும்..இது குறித்து பல முறை அனகாபுத்தூர் நகராட்சி அதிகாரிகளிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும்,மனு அளித்தும் முதல் அமைச்சருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்தும் தற்போது வரை தங்கள் இருபிடத்தை வந்து கூட யாரும் பார்க்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல வசதி இல்லாமலும் சாலை வசதி இல்லாத காரனத்தினாலும் மழை நீர் ஆங்காங்கே தேங்குவதால் வீட்டை விட்டு கூட வெளியே வர முடியாத சூழல் ஏற்படுவதாகவும் அதை போல் தேங்கி கிடக்கும் மழை நீரால் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்..எனவே தமிழக அரசு தங்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த உடனடியாக தங்களின் கோரிக்கைகளை நிறை...

கொத்து கொத்தாக சடலங்களை மீட்ட கொடுமை: தூக்கத்தில் 20 பேரின் உயிரை பறித்த படுபாவி டிரைவர் -அதிகாலையில் நடந்த கொடூர சம்பவம்

Image
வீடியோ இதோ:      பெங்களுரூவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம்  நோக்கிச்  கேரள அரசு சொகுசு பஸ் இன்று அதிகாலை (வியாழக்கிழமை )  3 மணியளவில் அவிநாசி அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்ஸில் 48 பேர்  பயணம் செய்து கொண்டு இருந்தனர். சொகுசு பஸ் என்பதால் பஸ்ஸில் வந்த அனைவருமே தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது எதிர் வழியில் சேலம் நோக்கி டைல்ஸ் ஏற்றிக்கொண்டு கண்டெயினர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி டிரைவர் திடீரென்று கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் கண்டெயினர் லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் மையத் தடுப்பை தாண்டி கண் இமைக்கும் நேரத்தில், துளி கூட வேகம் குறையாமல் ரோட்டின் மறுபக்கம் பாய்ந்தது.  அப்போது என்னவென்று சுதாரிப்பதற்குள் கேரள அரசு சொகுசு பஸ்ஸும், கண்டெயினர் லாரியும் பலமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சொகுசு பஸ்ஸில் வந்த பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே தூக்கத்திலேயே பலியாகினர்.  பஸ் மோதிய வேகத்தில் பலத்த சேதமடைந்தது. பஸ்ஸின் பாதி பகுதி உடைத்துக்கொண்டு போய் விட்டது.  இடிபாடுகளுக்குள் சிக்கி...

கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்தது : 3 பேர் பலி -9 பேர் படுகாயம்

Image
மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமலஹாசன் நடிக்கும், இந்தியன்-2 படப்பிடிப்பு நாசரத்பேட்டை இ.வி.பி., பிலிம் சிட்டியில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் சங்கர் உள்பட 50க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இதற்காக பவர் கிரிட், கிரேன், லைட், செட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் திடீரென லைட் அமைக்கப்பட்டு இருந்த கிரேன் சரிந்தது. இதில் பலர் கிரேனின் அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.  இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா (வயது 34), உணவு வழங்குபவர்கள் மது, சந்திரசேகர் ஆகிய 3 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.  மேலும், 9 பேர் காயமடைந்து உள்ளனர். காயமைடந்த நபர்கள் தண்டலம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ட்வீட்ட்டரிலும் இரங்கல் தெரிவித்து உள்ளார். இந்த விபத்தில் இயக்குனர் சங்கருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.   

சொகுசு பஸ்கள் மோதியதில் 6 பேர் ரத்த வெள்ளத்தில் பலி: 20 பேர் படுகாயம்

Image
  சேலம் மாவட்டம்,ஓமலூர் அருகே  பெங்களூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை என்.எச்.7 ல் சின்னநடுப்பட்டி பிரிவு பகுதியில்  நேபாளத்தை சேர்ந்த சுற்றுலா மினி பேருந்து கன்னியாகுமரியில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சின்னநடுப்பட்டி காளியம்மன் கோவில் மண்டபத்தில் தங்குவதற்காக பேருந்தை திருஓட்டுநர் திருப்பி உள்ளார். அந்த நேரத்தில். பெங்களூரிலிருந்து கேரளா செல்வதற்காக வந்த ஆரஞ்சு என்ற தனியார் ஆம்னி சொகுசு பஸ் ,  சுற்றுலாபஸ்ஸின்  நடுப்பகுதியில் மோதியது. பலத்த இந்த மோதலில் இரு பஸ்களில் இருந்தவர்களும் அலறினார்கள். இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே இரண்டு பெண்கள் உட்பட 6  பேர்  உயிரிழந்தனர். மேலும்  20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தொடர்ந்து விபத்து  நடந்த இடத்தில் சேலம் மாவட்ட போலீஸ் எஸ்.பி., தீபகணிக்கர், ஏ.எஸ்.பி.,  சுரேஸ்குமார் மற்றும் ஓமலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் வந்து வ...

விவசாய வேலைக்கு சென்ற பெண்கள் 3 பேர் பரிதாப பலி

Image
டிராக்டர் மீது லாரி மோதி விபத்து 3 பெண்கள் பலி!!!! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில்  டிராக்டர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளனாதில் டிராக்டரில் பயணித்த 3 பேர் பரிதபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து எட்டையபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எட்டையபுரம் அருகே உள்ள மாதாபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் விவசாய வேலைக்கு சென்று விட்டு டிராக்டரில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். டிராக்டரை பெரியசாமி என்பவர் ஓட்டி வந்துள்ளார். டிராக்டர் எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில்  மின்சார வாரியம் அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்த போது, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி இறக்கி விட்டு தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது.  இதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது, அதன் பாகங்கள் சிதறின. மேலும் டிராக்டரில் வந்த அந்தோணியம்மாள், கீதாராணி ஆகியோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். இச்சம...

திருப்பூர் ஸ்தம்பித்தது: கலெக்டர் அலுவலகம் நோக்கி சாரை சாரையாக படையெடுத்த இஸ்லாமிய பெண்கள் - சி.ஏ.ஏ.,வுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

Image
திருப்பூர் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டத்திற்கு 25000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாரை சாரையாக வந்து பங்கேற்று வருகின்றனர். திருப்பூர் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக இன்று காலை 10 மணி முதல் இஸ்லாமியர்கள் சாரைசாரையாக திருப்பூர் பல்லடம் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் நோக்கி படையெடுத்து வந்தனர். அவர்கள் திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியிலிருந்து பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். ஏராளமான இஸ்லாமிய பெண்கள் தேசியக் கொடியை ஏந்தி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதெல்லாம் முற்றிலும் திருப்பூர் பல்லடம் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் 25000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியைத் தொடர்ந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு கோஷமிட்டனர். திருப்பூர் போலீஸ் கமிஷன...