10 ஊராட்சிகளிலுள்ள 5000 குடும்பங்களுக்கு, 20 லட்சம் மதிப்புள்ள, அரிசி, மளிகை பொருட்கள் எம்.எல்.ஏ கே.என். விஜயகுமார் சொந்த செலவில் வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பத்து ஊராட்சிகளிலுள்ள ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் சொந்த செலவில் இருபது லட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை  8 வாகனங்களில் வழங்கினார். இந்த வாகனங்களை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்  கொடியசைத்து அனுப்பி வைத்தார்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


இந்நிகழ்வுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாலரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன்,  திருப்பூர் வடக்கு எம்எல்ஏ விஜயகுமார் தலைமை தாங்கினார்.  , திருப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் வேல்குமார் எம். சாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஐஸ்வர்யம் மகராஜ், சங்கீதா, ஊராட்சி தலைவர்கள் சுலோச்சனா வடிவேல், ரெஜீஸ், ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தங்கராஜ், மூர்த்தி, பொன்னுச்சாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி