இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 நாகை மீனவர்கள் விடுதலை


நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்திலிருந்து கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு இரண்டு மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கை பாயிண்ட் பெட்ரோ நீதிமன்றத்தில் இதுகுறித்து நடைபெற்று வந்த வழக்கில் அந்த 23 மீனவர்களை சிறையிலிருந்து விடுவித்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 23 பேரையும் இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது, அவர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி