முன்னாள் அதிமுக கொறடாவின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை!


கடந்த அதிமுக ஆட்சியில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு துணை ஆட்சியராகப் பணியாற்றிவந்தவர் பவானி. 

 இவர், முந்தைய அதிமுக ஆட்சியின் தலைமை கொறடாவான மனோகருக்கு உறவினர். நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் பவானி பணியாற்றிய காலகட்டத்தில், அளவுக்கு அதிகமான சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், அவர் மீது வேறு பல புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக அவருக்கு சொந்தமான மூன்று இடங்களில் இன்று (30.11.2021) லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். 

அதன்படி, திருச்சி மாம்பழ சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் வாளாடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள பள்ளி உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி